
தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் AI அமைப்புகளை உருவாக்க உழைத்தனர், ஆனால் துரதிருஷ்டவசமாக அதே AI அமைப்புகளால் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் AI-சார்ந்த குறியீட்டு முறைக்கு தீவிரமாக மாறிவரும் அதே நேரத்தில், சமீபத்திய பணிநீக்கங்கள் மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன.
CNBC அறிக்கையின்படி, மைக்ரோசாஃட் நிறுவனத்தின் இந்த பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று அறிவித்துள்ளது.
ஆனால் உள் தரவு ஒரு கவலையடைய செய்யும் போக்கை வெளிப்படுத்துகிறது.
ப்ளூம்பெர்க் பகுப்பாய்வின்படி, வாஷிங்டன் மாநிலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் மென்பொருள் பொறியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது நிறுவனம்.
AI
AI சாட்பாட்டால் பணியை இழந்த பொறியாளர்கள்
தி இன்ஃபர்மேஷனின் அறிக்கையின்படி, 400 பொறியாளர்களை மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் ஜெஃப் ஹல்ஸ், தனது குழுவினரை OpenAI-இயங்கும் சாட்பாட்களைப் பயன்படுத்தி அவர்களின் கோடிங்கில் 50 சதவீதம் வரை உருவாக்க உத்தரவிட்டார்.
வாரங்களுக்குப் பிறகு, பணிநீக்க செயல்முறையின் ஒரு பகுதியாக வேலை இழந்தவர்களில் அவரது குழுவும் இருந்தது.
இந்த பொறியாளர்கள் தாங்கள் அறியாமலேயே தங்கள் சொந்த மாற்றுகளுக்கு பயிற்சி அளித்து பணியை இழந்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா AI பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதை ஒரு உற்பத்தித்திறன் திருப்புமுனையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிநீக்கம்
பல அடுக்குகளில் நடைபெற்ற பணிநீக்கம்
பணிநீக்கங்கள் ஜூனியர் கோடர்களுடன் மட்டும் நிறுத்தப்படவில்லை.
தயாரிப்பு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிரல் மேலாண்மைப் பணிகளில் உள்ள ஊழியர்களும், AI திட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தொழிலாளர்களும் இந்த பணிநீக்கத்தில் சிக்கினர்.
மைக்ரோசாப்டின் ஸ்டார்ட்அப்களுக்கான AI இயக்குநரான கேப்ரியெலா டி குய்ரோஸ், தனது பணிநீக்கத்தை பகிரங்கமாக உறுதிப்படுத்தினார்.
அதேபோல, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிகளில் இருந்தும் பணிநீக்கங்கள் நடைபெற்றதாக செய்தி குறிப்புக்கள் காட்டுகின்றன.
வேலை இழந்த பல பொறியாளர்களுக்கு, கடினமான பகுதி என்னவென்றால், அவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம், AI- இயக்கப்படும் வளர்ச்சிக்கு மாற உதவினார்கள் என்பதுதான். ஆனால் அதன் காரணமாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.