LOADING...
இந்தியாவின் ஜிடிபி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்வு; வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சேவைத்துறை
இந்தியாவின் ஜிடிபி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்வு

இந்தியாவின் ஜிடிபி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்வு; வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சேவைத்துறை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2025
04:29 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6.5% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 7.8% ஆக அதிகரித்துள்ளது. சேவைத் துறையின் சிறப்பான வளர்ச்சியே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2011-12-ஆம் ஆண்டு விலைகளின்படி, உண்மையான ஜிடிபி ₹47.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹44.42 லட்சம் கோடியாக இருந்தது.

நாமினல் ஜிடிபி

நாமினல் ஜிடிபி விபரங்கள்

அதே சமயம், நடப்பு விலைகளின்படி மதிப்பிடப்பட்ட நாமினல் ஜிடிபி, 8.8% அதிகரித்து, ₹79.08 லட்சம் கோடியிலிருந்து ₹86.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. துறைவாரியான பகுப்பாய்வின்படி, சேவைத் துறை 9.3% வளர்ச்சியுடன் முன்னணி வகிக்கிறது. இது கடந்த ஆண்டு 6.8% ஆக இருந்தது. உற்பத்தி (7.7%) மற்றும் கட்டுமானம் (7.6%) ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறையும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அதே சமயம், சுரங்கத் துறை 3.1% சரிவைக் கண்டது. மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் போன்ற துறைகளை உள்ளடக்கிய பயன்பாடுகள் 0.5% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளன.