1991க்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலை; திணறும் நியூசிலாந்து
நியூசிலாந்தின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மந்தநிலையில் மூழ்கியது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.0% சுருங்கியது. இது முந்தைய 0.2% சரிவு சந்தை கணிப்புகளை விட கணிசமாக மோசமாக உள்ளது. முன்னதாக, முந்தைய ஜூன் காலாண்டிலும் ஜிடிபி 1.1% சுருங்கியது. இது கொரோனா தொற்றுநோய் காலத்தைத் தவிர்த்து, 1991 முதல் நாட்டின் ஆழமான இரண்டு காலாண்டு சரிவைக் குறிக்கிறது. மேலும், நியூசிலாந்தின் ஆண்டு உற்பத்தி 1.5% குறைந்தது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1% வீழ்ச்சியடைந்தது. அதே நேரம் மக்கள் தொகை 1.2% அதிகரித்து 5.35 மில்லியனாக இருந்தது. இந்த அறிக்கையையடுத்து, நியூசிலாந்தின் ரிசர்வ் வங்கி (RBNZ) வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை
முன்னதாக, அந்நாட்டு ரிசர்வ் வங்கி பொருளாதார மந்த நிலைமையை சமாளிக்க ஏற்கனவே விகிதங்களை 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.25% ஆக வைத்துள்ளது. சந்தை கணிப்புகள் இப்போது வரும் பிப்ரவரியில் 50-அடிப்படை புள்ளி குறைப்புக்கான 70% வாய்ப்பைக் குறிப்பிடுகின்றன. மேலும், இந்த விகிதங்கள் 2025க்குள் 3.0% ஆகக் குறையும். உற்பத்தி, பயன்பாடுகள், கட்டுமானம் மற்றும் வீட்டு மற்றும் அரசாங்க செலவினங்கள் இரண்டையும் தாக்கிய இந்த வீழ்ச்சியானது அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்துள்ளது. நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் அதிக பணவீக்கம் இந்த ஜிடிபி சுருக்கத்திற்கு காரணம் என்று கூறினார் மற்றும் நியூசிலாந்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளும் மந்தநிலைக்கு காரணம் என விமர்சித்தார்.