Loading...
இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்தில் குவியும் ஐரோப்பிய முதலீடுகள்
ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி ஆலைகள் மற்றும் சேவைத் துறைகளை விரிவுபடுத்த தமிழ்நாட்டை முதன்மை இலக்காக தேர்ந்தெடுத்து வருகின்றன

இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்தில் குவியும் ஐரோப்பிய முதலீடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 28, 2026
11:37 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) 2027-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி ஆலைகள் மற்றும் சேவைத் துறைகளை விரிவுபடுத்தத் தமிழ்நாட்டை முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து வருகின்றன. இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் ஏற்றுமதியில் 90.7% மதிப்பைக் கொண்ட 70.4% சுங்கப் பிரிவுகளுக்கான வரிகளை உடனடியாக நீக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளது. தோல், காலணிகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் பொம்மைகள் மீதான வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். மோட்டார் வாகனங்கள், கடல் உணவுகள், டயர்கள், இன்ஜெக்ஷன் பம்புகள் மற்றும் மின்தூக்கிகள் மீதான வரிகளும் முற்றிலுமாக நீக்கப்படவுள்ளன.

ஜாக்பாட்

திருப்பூர் ஜவுளித்துறைக்கு கிடைத்த ஜாக்பாட்

2025-26 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்தச் சரக்கு ஏற்றுமதியான 59.3 பில்லியன் அமெரிக்க டாலரில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டும் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 19%) மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2026 நிதி ஆண்டில் திருப்பூரின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 37% (2 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆடைகள் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஜவுளிகள் மீதான 10% வரி ரத்து செய்யப்பட உள்ளதால், அடுத்த 4 ஆண்டுகளில் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு 4 பில்லியன் டாலராக இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு

முதலீடுகளை ஈர்க்கும் மாவட்டங்கள்

இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்கள் நேரடியாக பயன்பெறவுள்ளன:

திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர்: ஜவுளி மற்றும் ஆடைத் துறைகள்

வேலூர், ஆம்பூர்: தோல் மற்றும் காலணித் தயாரிப்பு

சென்னை, கோவை, ஓசூர்: பொறியியல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி

தூத்துக்குடி, நாகப்பட்டினம்: கடல்சார் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறை

மேலும், அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டின் தொடர்ச்சியாக, முன்னணி செமிகண்டக்டர் நிறுவனம் ஒன்று சென்னையில் தனது முதலீட்டு சாத்தியக்கூறுகளை ஆராய உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT