
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள்
செய்தி முன்னோட்டம்
சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ளன.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்றால் அந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலேயே அதிக நாடுகளுக்குள் நுழையலாம்.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசாவே இல்லாமல் செல்லலாம்.
கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஆனால், தற்போது சில ஐரோப்பிய நாடுகளும் அந்த பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளன.
ட்ஜ்வ்க்ன்
இந்தியா 81வது இடத்திலும் பாகிஸ்தான் 101வது இடத்திலும் உள்ளன
பின்லாந்து மற்றும் ஸ்வீடன், தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசாவே இல்லாமல் பயணிக்கலாம்.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் அணுகலை வழங்குவதன் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இதில் இந்திய பாஸ்போர்ட் 81வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களால் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உட்பட 62 நாடுகளுக்குள் விசா இல்லாமலேயே நுழைய முடியும்.
இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் 81வது இடத்தை பிடித்துள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 101வது இடத்தை பிடித்துள்ளது.