NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்
    விபத்தில் 67 பேர் கொல்லப்பட்டனர்

    67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2025
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் நேற்று ஒரு பிராந்திய ஜெட் மற்றும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் இருக்கும் நேரத்தில், எந்த ஆதாரமும் இல்லாத போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) இல், ஜோ பைடன் மற்றும் ஒபாமாவின் கூட்டாட்சி பன்முகத்தன்மை கொள்கைகளே இந்த விமான விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

    இது பாதுகாப்பு தரங்களை பலவீனப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நேற்று நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் ஹெலிகாப்டர் விமானிகளை விமர்சித்தார் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தவறு செய்திருக்கிறார்களா என்றும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    விபத்து

    விபத்து குறித்த விவரங்கள்

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் Bombardier CRJ-700 விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகும் போது, இராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

    ஜெட் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர், ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். இவர்கள் அனைவருமே விபத்தில் இறந்தனர்.

    வானொலி தகவல்தொடர்புகளின்படி, ஹெலிகாப்டர் நெருங்கி வருவது குறித்து எச்சரிக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஹெலிகாப்டரை அதன் பாதையை மாற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

    ஜெட் விமானத்தில் பயணித்தவர்களில் ஐஸ் ஸ்கேட்டர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கன்சாஸின் பயிற்சி முகாமில் இருந்து திரும்பிய குடும்ப உறுப்பினர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ரஷ்யாவில் பிறந்த முன்னாள் உலக சாம்பியனான எவ்ஜெனியா ஷிஷ்கோவா மற்றும் வாடிம் நௌமோவ் ஆகியோர் அடங்குவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    விபத்து ஏற்பட்ட தருணம்

    #WATCH | அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் - ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்பு!

    விமானத்தில் 60 பேரும் ஹெலிகாப்டரில் 4 ராணுவ வீரர்களும் இருந்ததாக தகவல்.#SunNews | #America | #Washington | #FlightCrash pic.twitter.com/O8C3Gjdk5Q

    — Sun News (@sunnewstamil) January 30, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விபத்து
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விமானம்

    இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி? திருச்சி
    மும்பை-நியூயார்க் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்  ஏர் இந்தியா
    ஏர் இந்தியாவை தொடர்ந்து, மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல்
    இண்டிகோ விமான நிறுவனம் இப்போது Spotify உடன் கைகோர்த்துள்ளது; இலவச சந்தாவை வழங்குகிறது இண்டிகோ

    விபத்து

    திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது ரயில்கள்
    மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் மும்பை
    கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் பிரபல தின பூமி நாளிதழ் உரிமையாளர் மரணம் தூத்துக்குடி
    அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து அசாம்

    அமெரிக்கா

    உலக நாடுகளின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் ஜார்ஜ் சோரோஸ்; இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குற்றச்சாட்டு இத்தாலி
    'நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தியிருப்பேன்': கமலா ஹாரிஸ் தோல்வி குறித்து ஜோ பைடன் கருத்து ஜோ பைடன்
    அமெரிக்காவில் ஹார்டுவேர் பிரச்சினையால் 2 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா டெஸ்லா
    கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸுக்கு ஜனாதிபதிக்கான சுதந்திர பதக்கம் வழங்கி ஜோ பைடன் கௌரவிப்பு ஜோ பைடன்

    டொனால்ட் டிரம்ப்

    18,000 இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா; காரணம் என்ன? அமெரிக்கா
    டொனால்ட் டிரம்பின் அவதூறு வழக்கில் $15 மில்லியன் இழப்பீடு வழங்க ஏபிசி நியூஸ் ஒப்புதல் அமெரிக்கா
    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப் அமெரிக்கா
    உக்ரைன் மோதல் அதிகரிப்புக்கு மத்தியில் டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்த தயார் என புடின் அறிவிப்பு விளாடிமிர் புடின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025