Page Loader
அமெரிக்க மாணவர் விசாவுக்கு புதிய நிபந்தனை: மாணவர்களின் சோசியல் மீடியா விவரங்கள் கட்டாயம்
அமெரிக்க மாணவர் விசாவுக்கு புதிய நிபந்தனை

அமெரிக்க மாணவர் விசாவுக்கு புதிய நிபந்தனை: மாணவர்களின் சோசியல் மீடியா விவரங்கள் கட்டாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2025
11:24 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா, மாணவர்கள் விசா (F-1 Visa) வழங்கும் செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், இம்முறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், குறிப்பாக சமூக வலைதள கணக்கு விவரங்கள் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில செல்வதுண்டு. கடந்த மாதம் சில தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மாணவர்கள் விசா வழங்கும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடைமுறை

புதிய மாற்றங்கள் அறிமுகம்

தற்போதைய புதிய நடைமுறைகளின்படி, விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை கட்டாயமாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் இக்கணக்குகளின் கடைசி ஐந்து ஆண்டுகளுக்கான பதிவுகள் மற்றும் செயல்பாடுகளை பரிசோதித்து, அவற்றில் அமெரிக்க அரசு அல்லது மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்வார்கள். இது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக அமெரிக்கா விளக்குகிறது. புதிய நடைமுறைகள் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் சுயமதிப்பீடு செய்து சமூக வலைதளங்களில் பகிரும் உள்ளடக்கங்களை பொறுப்புடன் அணுக வேண்டும் எனவும், கல்வி கனவுகள் தடையின்றி தொடர இது முக்கியமானது எனவும் கூறப்படுகிறது.