
மின்னபோலிஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று குழந்தைகள் பலி, 17 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸில் உள்ள அநன்சியேஷன் கத்தோலிக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவார்" என்று பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி கூறினார்," என்று அறிக்கை மேலும் கூறியது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பிறகு, துப்பாக்கிதாரி தேவாலயத்தின் பின்புறம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்
பல குழந்தைகள் காயம்
"காயமடைந்த குழந்தைகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்று மினியாபோலிஸ் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களில் 14 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. அதில், ஒன்பது பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ரைபிள், ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ஹாண்ட் கன் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியிருந்தார். அவர் அவற்றையெல்லாம் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் பள்ளி தேவாலய ஜன்னல்கள் வழியாக தனது துப்பாக்கியால் சுட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 395 மாணவர்களைக் கொண்ட இந்த தனியார் தொடக்கப் பள்ளி விடுமுறை முடிந்து தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தக் கொடூரமான செயல் நடந்தது.