LOADING...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சில நாட்களில் சீனா விரைந்த புடின்; பின்னணி என்ன?
புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக செவ்வாய்க்கிழமை பெய்ஜிங் சென்றடைந்தார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சில நாட்களில் சீனா விரைந்த புடின்; பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக செவ்வாய்க்கிழமை பெய்ஜிங் சென்றடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு வருகை தந்த சில நாட்களிலேயே, தனது "அன்பான நண்பர்" என்று அழைக்கப்படும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை புதின் சந்திப்பது சர்வதேச அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் சீன வருகை இருநாட்டு பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில், புதினின் இந்த 25-வது சீனப் பயணம் இருநாடுகளின் நீண்டகால நட்புறவை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் ஈரான் போர் போன்ற சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், ரஷ்யா-சீனா உறவு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக புதின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நெருக்கடி

உக்ரைன் போரும் புதினின் உள்நாட்டு நெருக்கடியும்

உக்ரைன் போரின் பொருளாதாரத் தாக்கம் மற்றும் மொபைல் இணைய முடக்கம் போன்ற காரணங்களால் ரஷ்யாவில் புதினின் மக்கள் செல்வாக்கு 65.6%-ஆகக் குறைந்துள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன. இத்தகைய சூழலில், மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பிற்குப் பதிலடி கொடுக்கவும், உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் தூதரக ஆதரவைத் தக்கவைக்கவும் புதின் முயன்று வருகிறார். ஐரோப்பிய சந்தைகளை இழந்த ரஷ்யா, தற்போது சீனா மற்றும் இந்தியாவை மட்டுமே நம்பியுள்ளது. இச்சந்திப்பில், மங்கோலியா வழியாகச் சீனாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் "பவர் ஆஃப் சைபீரியா 2" திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதே புதினின் முக்கிய நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு ரஷ்யா முற்றிலும் சீனாவையே சார்ந்துள்ளதால், இருநாட்டு வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த உச்சிமாநாடு வழிவகுக்கும்.

Advertisement