65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது
உக்ரைனிய போர்க் கைதிகளை இடமாற்றம் செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட ரஷ்ய Ilyushin Il-76 இராணுவ போக்குவரத்து விமானம், புதன்கிழமை உக்ரைனிய எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது என மாநில செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது. விபத்திற்குள்ளான இந்த ரஷ்ய விமானத்தில் 65 உக்ரேனிய போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று பேர் இருந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லை. ரஷ்ய பாதுகாப்பு சேவைகளுடன் இணைக்கப்பட்ட ஒரு சேனலான Baza, டெலிக்ராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில், ஒரு பெரிய விமானம் தரையில் விழுந்து நொறுங்கி, தீபிடித்து வெடிப்பதைக் காட்டுகிறது.
விபத்திற்குள்ளான ரஷ்யா விமானம்
IlyushinIl-76 என பெயர்கொண்ட ரஷ்ய விமானம், பொதுவாக துருப்புக்கள், சரக்குகள், இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானத்தில் ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இராணுவ போக்குவரத்து விமானமாகும். இதில் பொதுவாக ஐந்து பணியாளர்களை பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். இந்த விமானத்தில் 90 பயணிகள் வரை பயணிக்க முடியும். பெல்கோரோட் நகரின் வடகிழக்கில், பிராந்தியத்தின் கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் குறிப்பிடப்படாத இந்த விமான விபத்து நிகழ்ந்ததாகவும், அந்த இடத்தை ஆய்வு செய்யப் போவதாகவும் உள்ளூர் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். புலனாய்வாளர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.