
இந்தியாவின் சிந்து நதி ஒப்பந்த இடைநீக்கத்திற்கு பாகிஸ்தான் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவை "நீர் போர்" செயல் என்றும் சட்டவிரோத நடவடிக்கை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக சவால் செய்வதாக சபதம் செய்த பாகிஸ்தான், உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா ஒருதலைப்பட்சமாக வெளியேற முடியாது என்று கூறியது.
கோழைத்தனம்
இந்தியாவின் நடவடிக்கையை கோழைத்தனம் எனக்கூறிய பாகிஸ்தான்
"இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்தது ஒரு நீர் யுத்தச் செயல்; ஒரு கோழைத்தனமான, சட்டவிரோத நடவடிக்கை. ஒவ்வொரு துளியும் உரிமையுடன் எங்களுடையது, அதை நாங்கள் முழு பலத்துடன் - சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உலகளவில் பாதுகாப்போம்" என்று பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவீஸ் லெகாரி ட்வீட் செய்துள்ளார்
ஒப்பந்தம் ரத்து
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான ராஜதந்திர தாக்குதலில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு குறித்த உயர்மட்ட கூட்டத்தை நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவின் எதிர்முனை தாக்குதலின் அதிரடியை குறிக்கிறது.
பாகிஸ்தான் "நம்பகத்தன்மையுடனும் மீளமுடியாத வகையிலும்" எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஒப்பந்தம்
சிந்து நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
உலக வங்கியின் தலையீட்டின் பேரில் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றின் மீது இந்தியாவிற்கு பிரத்தியேக கட்டுப்பாடு வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள இந்தியப் பிரதேசத்தில் உருவெடுத்தாலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் மீது பாகிஸ்தானுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்த ஒப்பந்தம் இத்தனை ஆண்டுகள் போர்கள் மற்றும் இராஜதந்திர முறிவுகளுக்கு மத்தியிலும் நீடித்தது.
ஆனால் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாக தெரிகிறது.