இந்தியா - நேபாள உறவு "மிகச்சிறந்தது": நியூயார்க்கில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனல் புகழாரம்
செய்தி முன்னோட்டம்
நியூயார்க்கில் நடைபெற்ற 'ஆசியா சொசைட்டி' நிகழ்ச்சியில் உரையாற்றிய நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் கனல், இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு "மிகச்சிறந்தது" மற்றும் "பரிமாணங்கள் கொண்டது" என்று பாராட்டியுள்ளார். நேபாளத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடனே நடைபெறுகிறது. 2024-25 நிதியாண்டில், நேபாளத்தின் மொத்த ஏற்றுமதியில் 81.1% இந்தியாவிற்கு மட்டுமே சென்றுள்ளது. இந்திய நிறுவனங்கள் நேபாளத்தில் பெரும் முதலீட்டாளர்களாக உள்ள நிலையில், ரக்ஸால் - பிர்கஞ்ச் வழித்தடம் இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக பாதையாக செயல்படுகிறது.
பிணைப்பு
'ரோட்டி - பேட்டி' உறவும் கலாச்சார பிணைப்பும்
இரு நாடுகளுக்கு இடையிலான பந்தம் வர்த்தகத்தையும் தாண்டி "ரோட்டி-பேட்டி கா ரிஷ்தா" (உணவு மற்றும் திருமண உறவு) என்ற குடும்ப பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 1950-ஆம் ஆண்டைய அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தத்தின் கீழ் 1,751 கி.மீ நீளமுள்ள திறந்த எல்லையை Passport அல்லது விசா இன்றி மக்கள் கடந்து செல்ல முடிகிறது எனச் சுட்டிக்காட்டினார்.
இந்திய ராணுவத்தில் நேபாள கோர்கா படைவீரர்கள் பணியாற்றுவதும், இரு நாட்டு ராணுவத் தளபதிகளுக்கும் பரஸ்பரம் கௌரவ 'ஜெனரல்' பதவி வழங்கி சிறப்பிப்பதும் இந்த உறைவிட ராணுவ நட்பிற்கு சான்றாகும்.
நேபாள பிரதமர் பாலேந்திர "பாலென்" ஷா தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, இந்தியாவுடனான உயர்மட்ட உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன.