Page Loader
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
அதிபர் வேட்பளராக கமலா ஹாரிஸிற்கு தனது ஆதரவை வழங்கினார் பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2024
07:45 am

செய்தி முன்னோட்டம்

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்தியா நேரப்படி நேற்று, (ஜூலை 21) இரவு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பைடன் தனது ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். அவர் தனது துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கு நன்றி தெரிவித்தார், அவரை "அசாதாரண கூட்டாளி" என்று குறிப்பிட்டு, அவரை தனது கட்சியின் வேட்பாளராக ஆமோதித்தார். இந்த சூழலில் அப்படி ஒருவேளை கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் அதிபராக வெற்றிபெற்றால், அமெரிக்க அரசியல் வரலாற்றில், நாட்டினை வழிநடத்தும் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஆவார்.

ட்விட்டர் அஞ்சல்

ஜோ பைடனின் அறிக்கை

ட்விட்டர் அஞ்சல்

கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

வலியுறுத்தல்

வயது காரணமாக பைடன் வெளியேற வேண்டும் என கருதிய காங்கிரஸ் உறுப்பினர்கள்

அதிபர் ஜோ பைடன் கடந்த சில மாதங்களாக வயது காரணமாக ஏற்பட்ட மறதியினால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அதனால் அவர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட முடியாது எனவும், அவர் வெளியேற வேண்டும் எனவும் கிடைத்த 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் பகிரங்கமாக வலியுறுத்தினர். டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கும் திறன் மற்றும் அவரது மனக் கூர்மை ஆகியவற்றில் நம்பிக்கையை இழந்த ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு தொடர் அழுத்தம் தந்து வந்தனர். பைடன் பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்களில் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் அடங்குவர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல்

இன்னும் 4 நான்கு மாதங்களில் தேர்தல்

46வது அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் இருந்து பைடன் விலகியமை, ஜனநாயகக் கட்சியை ஒரு அசாதாரண நிலையில் வைத்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதமும், நவம்பர் 5 தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. பைடன் வெளியேறிய நிலையில், டிரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸ்-ஐ நிறுத்துவதற்கு ஜனநாயக கட்சியின் முக்கிய ஆளுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.