LOADING...
டொனால்ட் டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் உறவினர்களா? ஸ்காட்லாந்து ரகசியத்தை உடைத்த ஆய்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் இருவரும் தூரத்து உறவினர்கள்

டொனால்ட் டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் உறவினர்களா? ஸ்காட்லாந்து ரகசியத்தை உடைத்த ஆய்வு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2026
07:18 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகிய இருவரும் வெறும் உலகத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தூரத்து உறவினர்கள் என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த 'குடும்ப ரகசியம்' வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'டெய்லி மெயில்' வெளியிட்டுள்ள டிரம்பின் Family Tree குறித்த ஆய்வின்படி, டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் ஆகிய இருவரும் ஸ்காட்லாந்தின் 3-வது லெனாக்ஸ் பிரபுவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இருவரும் 15-வது தலைமுறை உறவினர்கள் ஆகின்றனர்.

வரலாறு

வரலாற்றின் சுவாரசியமான பக்கங்கள்

1520-களில் வாழ்ந்த லெனாக்ஸ் பிரபு, ஸ்காட்லாந்து மன்னர் இரண்டாம் ஜேம்ஸின் கொள்ளுப் பேரன் ஆவார். லெனாக்ஸ் பிரபுவின் பேரன் லார்ட் டார்ன்லி, ஸ்காட்லாந்து ராணியின் கணவர். இவர்களது மகன் முதலாம் ஜேம்ஸ் வழியாகவே 'ஹவுஸ் ஆஃப் வின்ட்சர்' என்ற பிரிட்டன் அரச குடும்பத் தொடர்ச்சி உருவானது. லெனாக்ஸ் பிரபுவின் மகள் லேடி ஹெலன் வழியாக வரும் தலைமுறையில், டொனால்ட் மெக்கே என்ற பிரபுவின் வம்சம் தொடங்குகிறது. இந்த வழித்தோன்றலில் வந்த மேரி ஆன் மெக்லியோட் என்பவர் 1930-இல் ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். இவரே டொனால்ட் டிரம்பின் தாய் ஆவார்.

அரசியல் பதற்றம்

அரசியல் பதற்றங்களுக்கு இடையே ஒரு சந்திப்பு

டிரம்ப் மற்றும் சார்லஸ் இடையே உறவுமுறை இருந்தாலும், தற்போது வாஷிங்டன் மற்றும் லண்டன் இடையே அரசியல் ரீதியாகச் சில கசப்பான சூழல்கள் நிலவுகின்றன. குறிப்பாக, ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுத்து வரும் கடுமையான நிலைப்பாடுகள் பிரிட்டனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்ற உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவும் "நல்லுறவு மற்றும் புதுப்பித்தல்" குறித்து அவர் பேச வாய்ப்புள்ளது. "மன்னர் சார்லஸ் ஒரு சிறந்த மனிதர், அவர் ஒரு போராளி" என்று டிரம்ப் ஏற்கனவே புகழ்ந்துள்ளார். தனது தாயார் மறைந்த ராணி எலிசபெத் உடனும் தனக்கு நல்ல நட்பு இருந்ததாக அவர் அடிக்கடி நினைவுகூர்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement