NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்

    ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு: சவுதி அதிகாரிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 24, 2024
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, ​​சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் நிலவில் தீவிர வெப்பநிலை காரணமாக 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக சவுதி அதிகாரிகள் அறிவித்தனர்.

    இது குறித்து சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் கூறுகையில், 1,301 இறப்புகளில் 83% பேர், மெக்காவிலும் அதைச் சுற்றிலும் ஹஜ் சடங்குகளைச் செய்ய அதிக வெப்பநிலையில் நீண்ட தூரம் நடந்து சென்ற அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள்.

    அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர், 95 யாத்ரீகர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்திற்கு மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.

    இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

    உயிரிழப்பு

    எகிப்திலிருந்து நுழைந்த அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் 

    உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்டோர் எகிப்தியர்கள் எனக்கண்டறியப்பட்டுள்ளது.

    கெய்ரோவில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள்.

    இதன் தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குச் செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எகிப்து இந்த ஆண்டு 50,000 அங்கீகரிக்கப்பட்ட யாத்ரீகர்களை சவூதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது.

    அடையாளம் காணப்படாத இறந்தவர்களின் உடல்கள் மெக்காவில் புதைக்கப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து டஜன் கணக்கானவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று AP பிரஸ் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹஜ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஹஜ்

    ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல் இந்தியர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025