LOADING...
70-75 உருமாற்றங்களுக்கு உள்ளான கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது
கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது

70-75 உருமாற்றங்களுக்கு உள்ளான கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 26, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), அமெரிக்காவில் SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய கோவிட்-19 திரிபு தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திரிபு முதன்முதலில் 2024 நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது, அதன் பின்னர் 23 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த திரிபு அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளையும் மீறிச் செயல்படும் திறனைக் கொண்டிருப்பதால், தற்போதைய தடுப்பூசிகள் இதற்கு எதிராக செயலற்றதாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். BA.3.2 திரிபில் ஏறக்குறைய 70-75 மரபணு மாற்றங்கள் உள்ளன.

பரவல் மற்றும் கண்காணிப்பு

அமெரிக்காவுக்கு சென்ற 6 பயணிகளிடம் வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது

CDC தனது பயணிகள் அடிப்படையிலான மரபணு கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் பிஏ.3.2 மாறுபாட்டைக் கண்காணித்து வருகிறது. மார்ச் மாத நடுப்பகுதி நிலவரப்படி, அமெரிக்காவிற்குச் சென்று வந்த ஆறு பயணிகளிடமும், 29 மாகாணங்கள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும் இந்தத் திரிபு கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் முதல் பாதிப்பு, நெதர்லாந்திலிருந்து திரும்பிய ஒரு பயணியிடமிருந்து ஜூன் 2025-ல் உறுதி செய்யப்பட்டது .

கழிவுநீர் கண்காணிப்பு

கழிவுநீர் மாதிரிகளில் BA.3.2 மாறுபாடு கண்டறியப்பட்டது

அமெரிக்கா முழுவதும் உள்ள 260 கழிவுநீர் தளங்களிலும் BA.3.2 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய வைரஸ் மரபணு வரிசைமுறைகளில் சுமார் அரை சதவிகிதத்தில் மட்டுமே இந்த வகை வைரஸ் இருந்ததாக சிடிசி தரவுகள் காட்டுகின்றன. ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் BA.3.2 பிறழ்வுகள், முந்தைய தொற்று அல்லது தடுப்பூசியிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பைக் குறைக்கும் ஆற்றலை கொண்டிருந்தாலும், இந்த புதிய மாறுபாட்டால் ஏற்படும் கடுமையான நோயை தடுக்க தற்போதைய தடுப்பூசிகள் இன்னும் முக்கியமானவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

Advertisement

உலகளாவிய பரவல்

இந்த மாறுபாடு ஓங்கு திரிபாக அறிவிக்கப்படவில்லை

ஐரோப்பாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் BA.3.2 வகை வைரஸின் பாதிப்புகள் திடீரென அதிகரித்தன. டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவான பாதிப்புகளில் இது ஏறத்தாழ 30% ஆகும். இருப்பினும், மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது மனித செல்களுடன் இதன் பிணைப்புத் திறன் குறைவாக இருப்பதால், இது ஒரு முக்கிய திரிபாக மாறவில்லை. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் BA.3.2 வகை வைரஸ் பாதிப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகவில்லை.

Advertisement