
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அரபு நாடுகளுக்கு சென்றுள்ள ரிஷி சுனக் இன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார்.
அந்த சந்திப்பின்போது, காஸா பகுதிக்கு நிவாரண உதவிகளை கொண்டு போய் சேர்ப்பது, பிணைய கைதிகளை மீட்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சுனக், இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு வேறு எங்கு செல்கிறார் என்ற தகவலை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை.
அமெரிக்க அதிபர் பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது
British Prime Minister #RishiSunak to visit #Israel and meet his counterpart Benjamin Netanyahu and Israeli President Isaac Herzog. pic.twitter.com/706mycYzFT
— DD News (@DDNewslive) October 19, 2023