பிரிக்ஸ் அமைப்பால் டாலருக்கு மாற்றை உருவாக்க முடியாது; பிரிக்கை உருவாக்கிய பொருளாதார நிபுணர் கருத்து
செய்தி முன்னோட்டம்
பிரிக்ஸ் அமைப்பின் முன்னோடியான பிரிக் அமைப்பை உருவாக்கிய முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல், இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் பிளவுபட்டிருக்கும் வரை பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்கு சவால் விட முடியாது என்று கூறினார்.
அவர் பிரிக்ஸை பெரும்பாலும் ஒரு அடையாளமாகவே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதையும் பிரிக்ஸ் மேற்கொள்ளவில்லை என விமர்சித்தார்.
உலகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சக்திகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்று ஓ'நீல் வலியுறுத்தினார்.
உள் முரண்பாடுகள் மற்றும் சீனாவை அதிக அளவில் நம்பியிருப்பதால், சாத்தியமான மாற்று நாணயத்தை உருவாக்க நினைக்கும் பிரிக்சின் திறனையும் அவர் கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.
உலகளாவிய நிர்வாகம்
உலகளாவிய நிர்வாகத்தை உருவாக்கத் தவறிய பிரிக்ஸ்
பிரிக்ஸ் அமைப்பு உலக மக்கள்தொகையில் 45% மற்றும் பொருளாதாரத்தில் 35% ஆக இருந்தாலும், முக்கிய சீர்திருத்தங்களைத் தொடரவோ அல்லது வலுவான உலகளாவிய நிர்வாகத்தை உருவாக்கவோ தவறிவிட்டது என்று ஜிம் ஓ நீல் கூறினார்.
குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றார்.
ரஷ்யா, உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஒரு மாற்று உலகளாவிய பணப் பரிவர்த்தனை தளத்திற்கு அழுத்தம் கொடுத்தது.
ஆனால் பல தசாப்தங்களாக பேசப்பட்ட போதிலும் டாலருக்கு மாற்றை உருவாக்க தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஓ'நீல் கூறினார்.
அவரது பார்வையில், பிரிக்சில் தெளிவான குறிக்கோள்கள் மற்றும் ஒற்றுமை இல்லை. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான பிளவுகள் தீவிர பொருளாதார ஒத்துழைப்பை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன.