LOADING...
ஜெர்சியா? விளம்பரத் தட்டியா? ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன்?
ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன் என பாப்போம்.

ஜெர்சியா? விளம்பரத் தட்டியா? ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன்?

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 04, 2026
03:39 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மைதானங்கள் மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணியின் மஞ்சள் நிற உடைக்கோ அல்லது மொரோக்கோ அணியின் உடைக்கோ இருக்கும் அந்த 'கெத்து' ஐபிஎல் ஜெர்சிகளுக்கு இருக்கிறதா என்றால், பெரும்பாலான ரசிகர்களின் பதில் 'இல்லை' என்பதுதான். ஏன் ஐபிஎல் ஜெர்சிகள் வெறும் விளம்பரப் பலகைகளாக மாறிப்போயின? இது குறித்து இந்தியாவின் முன்னணி வடிவமைப்பாளர் ஆகிப் வானி (Aaquib Wani) பகிரும் சுவாரசியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பு இன்மை

விளம்பரங்களின் ஆதிக்கம்

ஐபிஎல் ஜெர்சிகளின் மிகப்பெரிய சாபமே அதன் மேல் அடுக்கடுக்காக ஒட்டப்படும் ஸ்பான்சர் லோகோக்கள் தான். ஸ்பான்சர்கள் இருப்பது தப்பில்லை, ஆனால் அவை ஜெர்சியின் வடிவமைப்புடன் ஒன்றிப்போவதில்லை என்கிறார் ஆகிப் வானி. உதாரணமாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உடையில் ஒரு பெரிய வெள்ளை நிறப் பெட்டிக்குள் ஸ்பான்சர் லோகோ இருப்பதை அவர் 'குப்பை' (Trashy) என்று விமர்சிக்கிறார். ஃபார்முலா 1 (F1) கார்களில் ஐபிஎல்-ஐ விட அதிக லோகோக்கள் இருக்கும், ஆனால் அவை காரின் டிசைனோடு மிக அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஐபிஎல்-இல் ஜெர்சியை வடிவமைத்துவிட்டு, அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவது போல லோகோக்களை ஒட்டுகிறார்கள்.

அடையாளம்

ஒரே மாதிரியான நிறங்கள்

ஐபிஎல் அணிகளில் சிஎஸ்கே (மஞ்சள்), கேகேஆர் (ஊதா/தங்கம்), ஆர்ஆர் (பிங்க்) போன்ற சில அணிகளைத் தவிர மற்ற பெரும்பாலான அணிகள் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களையே சுற்றி வருகின்றன. அணிகள் வணிக ரீதியாகப் பாதுகாப்பான நீலம் மற்றும் சிவப்பு நிறங்களையே தேர்ந்தெடுக்கின்றன. இதனால் ஒரு அணியின் உடைக்கும் இன்னொரு அணியின் உடைக்கும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை என்கிறார் வானி. சிஎஸ்கே மஞ்சள் நிறத்தை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துவதால் தான், அந்த நிறத்தைப் பார்த்தாலே 'தோனி' மற்றும் 'சென்னை' என்ற அடையாளம் சட்டென மனதில் பதிகிறது.

Advertisement

தரம் மற்றும் கள்ளச் சந்தை

விலைக்கு ஏற்ற தரம் இல்லை

அசல் ஜெர்சிகளின் விலை ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அதன் தரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் புகார்கள் உள்ளன. அசல் ஜெர்சிகளில் பயன்படுத்தப்படும் துணி மற்றும் தரம் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. அதே தரம் 200 ரூபாய்க்கு விற்கும் போலி ஜெர்சிகளிலும் கிடைக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏன் அதிக பணம் கொடுத்து அசலை வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. அடிடாஸ் போன்ற நிறுவனங்கள் இந்திய அணிக்கு வடிவமைக்கும்போது ஒரு 'பிரீமியம்' உணர்வு கிடைக்கிறது. ஆனால் ஐபிஎல் அணிகள் செலவைக் குறைக்க மலிவான மெட்டீரியல்களைப் பயன்படுத்துவதாக வானி சுட்டிக்காட்டுகிறார்.

Advertisement

தீர்வு என்ன?

நிலையான அடையாளம்

ஐபிஎல் ஜெர்சிகள் வரலாற்றுச்சிறப்புமிக்க அடையாளங்களாக மாற ஆகிப்வானி கூறும் ஆலோசனைகள்: 1999 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் ஒரே நிறுவனம் வடிவமைத்தது போல், பொதுவான தரக்கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும். மார்க்கெட்டிங் டீம்கள் முடிவெடுப்பதைத் தவிர்த்து, அனுபவமிக்க டிசைனர்களிடம் முழுப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் டிசைனை மாற்றிக்கொண்டே இருக்காமல், ஒரு நீண்ட கால வண்ண அடையாளத்தை உருவாக்க வேண்டும். கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு அல்ல, அது ஒரு உணர்வு. தோனியின் '7' அல்லது கோலியின் '18' எண் கொண்ட ஜெர்சிகளை ரசிகர்கள் தங்களின் அடையாளமாக நினைக்கிறார்கள். அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஐபிஎல் நிர்வாகங்கள் லாபத்தை மட்டும் பார்க்காமல், தரமான மற்றும் அழகான ஜெர்சிகளை உருவாக்க முன்வர வேண்டும்.

Advertisement