NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2023
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    வங்கதேச அணியில் மொஹமதுல்லா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டாக்காரர்கள் அப்துல்லா சபீக் (68) மற்றும் ஃபகார் ஜமான் (81) அதிரடியால் 32.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    FIFA announces Saudi Arabia to host 2034 World Cup

    2034 கால்பந்து உலகக்கோப்பையை சவூதி அரேபியா நடத்தும் என பிபா அறிவிப்பு

    பிபா உலகக் கோப்பை 2034ஐ சவூதி அரேபியா நடத்தும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "2030க்கான பிபா உலகக்கோப்பை தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே கூட்டாக நடத்த உள்ளன. 2034க்கான போட்டியை ஆசியாவில் உள்ள சவூதி அரேபியா நடத்தும்." என தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் விரிவான ஆலோசனைக்குப் பிறகு, பிபா கவுன்சில் ஏகமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, 2026 உலகக்கோப்பையை கனடா, அமேரிக்கா மற்றும் மெக்சிகோ கூட்டாக நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Kane Williamson ruled out of Match against South Africa

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வெளியேற்றம்

    புதன்கிழமை (நவம்பர் 1) புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 11வது போட்டியில் அவரது இடது கட்டை விரலில் மோசமான காயம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் கேன் வில்லியம்சன், ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேன் வில்லியம்சன் இடம்பெற மாட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    Indian Womens Hockey Team beats Japan in ACT 2023

    மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

    செவ்வாயன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்நடந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய ஹாக்கி அணி நடப்பு சாம்பியன் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில் முதல் பாதியில் எந்தவொரு அணியின் கோல் அடிக்க முடியாமல் சமனில் முடிந்தது.

    எனினும் இரண்டாவது பாதியில், இந்தியாவின் நவ்நீத் கவுர் (31') மற்றும் சங்கீதா குமாரி (47') ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

    இதற்கிடையே ஜப்பான் அணி சார்பில் கனா உராதா (41') ஒரு கோல் அடிக்க, இந்தியா ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதன் மூலம், இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி தோல்வியே கண்டிராத அணியாக இந்தியா உள்ளது.

    PV sindhu struggles with knee injury

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்

    இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, கடந்த வாரம் பிரெஞ்சு ஓபனில் பிடபிள்யூஎப் டூர் சூப்பர் 750 போட்டியின்போது தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    பிவி சிந்து அந்த போட்டியில் சுபனிடா கேத்தோங்கை எதிர்கொண்டு முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டில் ஸ்கோர் 1-1 ஆக இருந்தபோது, கேத்தோங்கிடம் இருந்து வந்த ஒரு ஷாட்டைத் திரும்பப் பெறும்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய பிவி சிந்து, மருத்துவ பரிசோதனை செய்ததில் காயம் இருப்பது உறுதியானதை அடுத்து, சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கால்பந்து
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 திரைக்கு வருகிறது விக்னேஷ் சிவன்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா

    ஒருநாள் உலகக்கோப்பை

    முட்டாள்தனமான யோசனை; உலகக்கோப்பை நிர்வாகிகளை விளாசிய ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    விளிம்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா? இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ENGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு இலங்கை கிரிக்கெட் அணி
    இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ பிசிசிஐ

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    தாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா இந்தியா
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி ஒருநாள் உலகக்கோப்பை

    கால்பந்து

    ஜெயிலர் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்த ரொனால்டோ; வைரலாகும் புகைப்படம் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : வெண்கலம் வென்றது ஸ்வீடன் கால்பந்து அணி கால்பந்து செய்திகள்
    அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி அமெரிக்கா
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின் கால்பந்து செய்திகள்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    நியூசிலாந்து அணி அபாரம் : இலங்கைக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி டி20 கிரிக்கெட்
    ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல் ஒருநாள் கிரிக்கெட்
    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! கிரிக்கெட்
    ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025