ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வரும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தாவும், டி.குகேஷும் நேருக்கு நேர் மோதினார்கள்.
இந்த ஆட்டம், ட்ரைவில் முடிந்தது.
இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவ் முதல் இடத்திலும், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர் ஆர்.பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
செக்குடியரசின் நுயென் தான் டாய்-உம் அதே புள்ளிகளை பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்
தரம்சாலாவில் இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில், இன்று நடைபெறும் இந்த போட்டி இறுதி போட்டியாகும்.
இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
அதோடு, இந்த டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
பேட்மிண்டன்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன தைபேவின் சவு டியன் செனை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியின் முடிவில், கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மறுபுறம், மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாய் 17-21,17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லு குவாங் சூ-விடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்த வீராங்கனை பி.வி. சிந்து, கனடாவின் மிட்செல்லியுடன் மோதி வெற்றி பெற்றார்
ஐஎஸ்பிஎல்
ஐஎஸ்பிஎல் டி10: சச்சின், ரெய்னா உடன் சூர்யா
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர், அறிமுகம் ஆகியுள்ளது. இது 10 ஓவர்களை கொண்ட, டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடராகும்.
இந்த ஐஎஸ்பிஎல் டி10 தொடரின் முதல் சீசன், நேற்று, மார்ச் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதில், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் விளையாடுகின்றன.
இந்த அணிகளை, இந்திய சினிமா பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.
அதில், சென்னை சிங்கம்ஸ் அணியை சூர்யா வாங்கியுள்ளார்.
முதல போட்டி, மும்பையில் நேற்று தொடங்கியது.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, நடிகர்கள் சூர்யா, ராம்சரண், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.