NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, முதலிடத்தில் உள்ளது

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து, ஐசிசி நேற்று டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

    இதில், இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது.

    அதேபோல, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலிலும், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

    மல்யுத்தம்

    ஒலிம்பிக் தகுதி சுற்றில், ரோஹித் குமார் மற்றும் அமன் ஷெராவத் தகுதி

    இந்த ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் மல்யுத்த போட்டிக்கான தகுதி சுற்றில், இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

    எனினும், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச் சுற்றுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் அமன் ஷெராவத்தும், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் ரோஹித் குமாரும் இந்தியா சார்பில் பங்கேற்பர்.

    மகளிர் 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் ஐபிஎல்

    பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் அணி

    தற்போது நடைபெற்று வரும் மகளிருக்கான ஐபில் போட்டித்தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிராக நடந்த 17ஆவது லீக் போட்டியில், வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற இந்தப் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

    CCL போட்டி 

    பிளே ஆஃப் சுற்றுக்கு தாது பெற்றது சென்னை ரைனோஸ்

    நடைபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியின் 10ஆவது சீசனில், இந்திய திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    ஏற்கனவே, கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், நான்காம் அணியாக நேற்று சென்னை ரைனோஸ் இணைந்துள்ளது.

    வரும் 15ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    ஐசிசி
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் மல்யுத்தம்
    விருதுகளை நடைபாதையில் விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம்
    ஃபிரீ ஃபையர் மேக்ஸ் பிளேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக சூப்பர் அறிவிப்பு இ-ஸ்போர்ட்ஸ்

    ஐசிசி

    அனைத்து ICC ஃபார்மெட்களிலும் முதலிடம், சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்
    தாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடக்க போட்டிக்கான நடுவர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை
    விரைவில் பாபர் அசாமின் நெ.1 இடத்திற்கு வேட்டு; தரவரிசையில் ஷுப்மன் கில் அபார முன்னேற்றம் ஒருநாள் தரவரிசை

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : பேட்டிங் சொதப்பலால் படுதோல்வி அடைந்தது இந்தியா இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    சூர்யகுமார் யாதவுக்கு காயம்; ஆப்கான் டி20 தொடரில் அணியை வழிநடத்தப்போவது யார்? சூர்யகுமார் யாதவ்
    'இதுதான் எல்லாம்'; டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025