NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    08:13 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.

    இன்று காலை 9:30 மணிக்கு போட்டி துவங்கவிருக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தியது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.

    இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாலிபால் 

    பிரைம் வாலிபால் லீக்: அகமதாபாத் - சென்னை இன்று மோதல்

    பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசனுக்கான போட்டிகள் இன்று துவங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கும் இந்த போட்டிகள், வரும் மார்ச் 21-ஆம் தேதி வரை நடைபெறும்.

    இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், ஆகிய அணிகளுடன் புதிய அறிமுகமாக டெல்லி டூபான்ஸ் அறிமுக அணியாக இணைந்துள்ளது.

    இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

    துவக்க ஆட்டத்தில், இன்று அகமதாபாத் - சென்னை அணிகள் மோதுகின்றன

    கிரிக்கெட் 

    டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோஹித் சர்மா கேப்டன்

    எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

    கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மூன்றே மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ரோஹித் ஷர்மா விளையாடிய நிலையில், அவர் அடுத்த போட்டி தொடரை வழிநடத்துவார் என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் தான், சந்தேகங்களை போக்கி, உறுதிபட தெரிவித்துள்ளார் ஜெய் ஷா.

    கால்பந்து

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  கிரிக்கெட் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம் ஆசிய விளையாட்டுப் போட்டி

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கால்பந்து
    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் மல்யுத்தம்

    கிரிக்கெட் செய்திகள்

    ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி 365 நாட்கள்; டெல்லி கேப்பிடல்ஸ் உருக்கமான பதிவு டெல்லி கேப்பிடல்ஸ்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா மகளிர் கிரிக்கெட்
    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025