NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2023
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி த்ரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக, கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் ரன்கள் எடுத்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் சரிந்தாலும், கிளென் மேக்ஸ்வெல் கடைசி வரை நின்று சதம் அடித்ததோடு, கடைசி பந்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். விரிவாக படிக்க

    Indian Street Premier league to be launched in 2024

    2024இல் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அறிமுகம்

    ஐபிஎல்லை போல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டையும் வளர்த்தெடுக்கும் முயற்சியாக 2024 முதல் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற பெயரில் புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தலா 10 ஓவர்களைக் கொண்டு டி10 வடிவத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் டென்னிஸ் பாலை பயன்படுத்தி விளையாட உள்ளனர்.

    முதற்கட்டமாக மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு ஆறு அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன.

    ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கும் என்றும், முதல் சீசனில் மொத்தம் 19 போட்டிகள் விளையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க

    India vs Australa T20 Australia withdraws 6 players in mid of tournament

    இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : ஆறு வீரர்களை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.

    இந்நிலையில், மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் நாடு திரும்புவார்கள் என தெரிவித்துள்ளது.

    இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஜம்பா ஏற்கனவே ஆஸ்திரேலியா கிளம்பிவிட்ட நிலையில், எஞ்சிய வீரர்கள் மூன்றாவது போட்டி முடிந்த பிறகு புதன்கிழமை ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளனர்.

    நாடு திரும்பும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விரிவாக படிக்க

    Syed Modi International Ashwini Ponnappa pair enters in Secound Round

    சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் : அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி

    சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க நாளான செவ்வாயன்று கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் ரோகன் கபூர் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    மலேசியாவின் பெங் சூன் சான் மற்றும் யீ சீ சேயை முதல் சுற்றில் எதிர்கொண்ட இருவரும் 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

    மேலும், பி சுமீத் குமார் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, தைவானின் ஹ்சுவான்-யி வு மற்றும் சூ யுன் ஜோடியை 21-14, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில், சிராக் சென், ரவியிடம் இருந்து கடுமையான சவாலை முறியடித்து, 21-7, 12-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    Sheetal Devi becomes no 1 in world archery rankings

    உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பாரா விளையாட்டு வீராங்கனை

    செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட உலக வில்வித்தை தரவரிசையில் மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை திறந்த பிரிவில் இந்திய பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி உலகின் நம்பர் 1 இடத்தை கைப்பற்றினார்.

    230 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்த ஷீத்தல், இரண்டு இடங்கள் முன்னேறி இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அவர் சர்வதேச அளவில் போட்டியிடும் உலகின் முதல் கையில்லாத பெண் வில்வீரர் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.

    இதற்கிடையே ஆடவர் பிரிவில் பாரா ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற ராகேஷ் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    பிரிட்டனின் நாதன் மக்வீன் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பொனாசினா ஆகியோருக்குப் பின்னால் இந்தியர் மட்டுமே உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs ஆஸ்திரேலியா
    கிரிக்கெட்
    பேட்மிண்டன் செய்திகள்
    வில்வித்தை

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஒருநாள் கிரிக்கெட்
    INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா? ஒருநாள் கிரிக்கெட்
    ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட் அணி
    IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கெடுத்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு? ஒருநாள் உலகக்கோப்பை
    திருநங்கைகளுக்கு தடை விதித்த ஐசிசி; சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேனியல் மெக்கஹே ஓய்வு திருநங்கை
    போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி கிரிக்கெட் செய்திகள்
    ரோஹித் ஷர்மாவுக்கு இனி அணியில் இடமில்லை? பரபரப்புத் தகவல் ரோஹித் ஷர்மா

    பேட்மிண்டன் செய்திகள்

    சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி! சிங்கப்பூர்
    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் பிரணாய் எச்.எஸ்.
    இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் பிரணாய் எச்.எஸ்.
    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்று புது வரலாறு படைத்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி

    வில்வித்தை

    வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி இந்தியா
    ஆடவர் வில்வித்தை ரிகர்வ் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீரர் பார்த் சலுன்கே சாதனை இந்தியா
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் உலக சாம்பியன்ஷிப்
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் உலக சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025