NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!
    நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

    PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 27, 2023
    10:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய இரு ஓப்பனர்களும் சொதப்ப, அதன் பின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் கூட்டணி சிறது ரன்களைக் குவித்து சற்று நம்பிக்கை அளித்தது.

    ரிஸ்வான் 31 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்த போதிலும், பாபர் அசாம் அரைசதம் கடந்தார். அதன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானுக்குப் பிறகு களமிறங்கிய இடைவரிசை பேட்டர்களும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சிற்கு தாக்குப் பிடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    ஒருநாள் உலகக்கோப்பை

    பாகிஸ்தானை கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா: 

    பாகிஸ்தான் அணியின் இடைவரிசை பேட்டரான ஷவுடு ஷக்கீல் அரைசதம் கடக்க, அந்த அணியின் சதாப் கான் 43 ரன்களைக் குவித்து நம்பிக்கையளித்தார். அதன் பின்பு களமிறங்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

    தென்னாப்பிரிக்க அணியின் மார்கோ யான்சன் மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகிய இருவரும் சிறப்பாகப் பந்துவீசி முறையே 3 மற்றும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.

    271 என்ற எளிய இலக்கோடு தான் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அது எளிய இலக்கு இல்லை என்பதை நிரூபித்தது பாகிஸ்தானின் பந்துவீச்சு.

    பாகிஸ்தான்

    பொறுமையைக் கடைப்பிடித்த தென்னாப்பிரிக்கா: 

    தென்னாப்பிரிக்க அணியில் கடந்த போட்டிகளில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டி காக் இந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி 24 ரன்களைக் குவித்ததோடு அதிரடியாக ஆட்டமிழந்தார்.

    அதன் பின் ஆடிய அனைத்து தென்னாப்பிரிக்க பேட்டர்களும் பொறுமையான ஆட்டத்தையே கடைப்பிடித்தனர். தென்னாப்பிரிக்க அணி சீராக ரன்களைக் குவித்த போதிலும், சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணியும் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

    ஆறாவது விக்கெட் விழும் வரை சற்று சாதகமான நிலையிலேயே இருந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆறாவது விக்கெட் விழுந்த பிறகும் இன்றைய போட்டியில் 91 ரன்களைக் குவித்த எய்டன் மார்க்ரம் ஆடிக் கொண்டிருந்தார்.

    ஆனால், 41வது ஓவரில் அவரும் ஆட்டமிழக்க, வெற்றிக் காற்று பாகிஸ்தான் பக்கமும் சற்று வீசத் தொடங்கியது.

    தென்னாப்பிரிக்கா

    போராடிய பாகிஸ்தான்: 

    ஏழாவது விக்கெட்டைத் தொடர்ந்து எட்டாவது விக்கெட்டும் விழ, பாகிஸ்தானுக்கான வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமானது. இறுதியாக 21 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய சூழ்நிலையில் மிக மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் தென்னாப்பிரிக்க டெயில் எண்டர்கள்.

    எனினும் கடைசி இரண்டு விக்கெட்டுகளை சாய்க்க இறுதி வரை போராடினர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தானின் முயற்சிக்கு பலனும் கிடைத்தது. 46வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தியது பாகிஸ்தான்.

    அதே 16வது ஓவரின் இறுதிப் பந்தில் தென்னைப்பிரிக்காவின் இறுதி விக்கெட்டிற்கான LBW-வுக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுக்க, ரிவ்யூ செய்தது பாகிஸ்தான். அது அம்பையர் காலாக மயிரிழையில் தப்பிப் பிழைத்தது தென்னாப்பிரிக்கா.

    கிரிக்கெட்

    இறுதி நிமிட பரபரப்பு: 

    இறுதியில் நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இரு அணிகளுமே வெற்றிக் கனியைப் பறிக்க ஒரு நல்ல பந்து மட்டுமே தேவை. பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கெட், தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு சிக்சர். ஒவ்வொரு ரன்னையும் மிக கவனமாக ஓடி எடுத்தனர் தென்னாப்பிரிக்கா அணியின் டெயில் எண்டர்கள்.

    டெஸ்ட் போட்டிக்கு நெருக்கத்தில் வந்த இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் நவாஸின் பந்தில் பவுண்டரியை அடித்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தார் கேஷவ் மகாராஜ்.

    மயிரிழையில் அம்பையர்ஸ் கால் மூலம் தப்பிப் பிழைத்து மயிரிழையில் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.

    இந்தத் தோல்வியுடன் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    பாகிஸ்தான்
    தென்னாப்பிரிக்கா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    ஒருநாள் உலகக்கோப்பை

    Sports Round Up : பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் கால்பந்து
    ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து போட்டிக்கு முன்னதாக அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    பக்கா பிளானோடு இறங்கணும்; நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து இந்திய கிரிக்கெட் அணி
    INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    SLvsNED : சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை ஒருநாள் உலகக்கோப்பை
    மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை பிக் பாஷ் லீக்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்த முகமது ஷமி ஒருநாள் உலகக்கோப்பை

    பாகிஸ்தான்

    BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு ஆசிய கோப்பை
    INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா? ஆசிய கோப்பை
    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! ஆசிய கோப்பை

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  இந்தியா
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் நோபல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025