அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழங்கால் காயம் காரணமாக விலகியதால், தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.
ஹர்மன்ப்ரீத் மட்டுமல்லாது வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் ஆகியோரும் அணியில் இடம்பெறாததால், புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைத்திட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தவறவிட்ட பிறகு தேஜல் ஹசாப்னிஸ் மீண்டும் இந்த தொடரின் மூலம் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய அணி
மகளிர் இந்திய கிரிக்கெட் அணி
அதே நேரத்தில் இளம் வீரர்கள் ரக்வி பிஸ்ட், பிரதிகா ராவல் மற்றும் பிரியா மிஸ்ரா ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்.
சமீபத்தில் 115 பந்துகளில் 197 ரன்கள் எடுத்திருந்தாலும், ஷஃபாலி வர்மா தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-0 ஒருநாள் கிரிக்கெட் ஒயிட்வாஷ் வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் நுழைகிறது.
இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டிடாஸ் சாது, சைமா தாகூர், சயாலி சத்கரே.