RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல்முறையாக ஆல் அவுட் ஆனது. RCB அணியை 28 ரன்களில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த சீசனில் முதல் முறையாக ஆல்-அவுட் ஆன அணி ஆர்சிபி என்ற வரலாறு படைத்துள்ளது. அது மட்டுமின்றி, சொந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவிய அணியாக RCB உள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் RCB அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி. 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த கோலியின் விக்கெட்டை லக்னோவின் மணிமாறன் சித்தார்த் வெளியேற்றினார்.