LOADING...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2023
12:11 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் பங்குபெற இந்தியா வருவதற்கு விசா கிடைப்பதில் தாமதமான நிலையில், தற்போது விசா வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அரசு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்த வாரம் துபாயில் அணிக்கு வழங்க இருந்த பயிற்சி திட்டத்தை ரத்து செய்தது. மேலும், விசா தாமதம் குறித்து பிசிபி, ஐசிசிக்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இதுகுறித்து பிசிபி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசா வழங்குவதில் உள்ள அசாதாரண தாமதம் மற்றும் பாகிஸ்தானை சமத்துவமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்தும் ஐசிசி தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை (செப்.25) இந்தியா விசா வழங்கியுள்ளது.

India approves visa for pakistan cricket team

ஹைதராபாத்தில் நியூசிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான்

அக்டோபர் 5 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) முதல் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. இதன்படி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அணி துபாயில் பயிற்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாகிஸ்தானின் லாகூரில் இருந்து நேரடி விமானம் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத்திற்கு வர உள்ளது.