
ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் எதிரொலியாக, விமான நிலையங்களிலும், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 200 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது, 18 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கான இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்த நிலையில், தற்போது மைதானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றங்கள்
விமான சேவைகளில் பெரிய மாற்றங்கள்
இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள மாநிலங்களில் 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா விமான நிலையமும் மூடப்பட்ட நிலையில், மே 11ம் தேதி அங்கு நடைபெற இருந்த மும்பை - பஞ்சாப் லீக் போட்டியின் இடம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாடுகளின்படி, இந்த போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது என் செய்தி வெளியாகியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடும் மும்பை அணி, மே 8ம் தேதி தரம்சாலா செல்ல திட்டமிட்டிருந்தது.
தற்போது, மாற்று பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடைமுறையில் உள்ளன.