இந்த நாளில்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது!!
கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் புது வரலாற்றைப் படைத்தது. அமைதியான மற்றும் தந்திரமான எம்.எஸ். தோனியின் தலைமையிலான இந்தியா, ஒரு சிலிர்ப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது.
BCCI பதிவு
T20 உலகக் கோப்பை 2007 இறுதிப் போட்டி: ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்
இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் அணி மொத்தம் 157/5 ரன்களை குவித்தது. கம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். ரோஹித் வெறும் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்தார். அதே போல, பாகிஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் ஆட்டம் நிறைவுற்றது. ஒரு கட்டத்தில், கடைசி நான்கு பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெற்றி பெறத்தயாராக இருந்தது. இருப்பினும், ஸ்கூப் ஷாட்டில் மிஸ்பாவின் முயற்சி அவர் ஆட்டமிழக்க வழிவகுத்தது.