
சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை : அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதும் இந்திய ஹாக்கி அணி
செய்தி முன்னோட்டம்
இந்திய ஹாக்கி அணி வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) 11வது சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை 2023 இன் அரையிறுதியில், ஜெர்மனியை எதிர்த்துப் போட்டியிட உள்ளது.
சுல்தான் ஆஃப் ஜோகூரின் நடப்பு சாம்பியனான இந்தியா, இந்த சீசனில் போட்டி முழுவதும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததோடு, எந்த அணியாலும் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை.
இந்தியா குழுநிலை ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
அதைத் தொடர்ந்து நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் உத்தம், எஞ்சிய போட்டிகளுக்கு அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
India ready to beat Germany in Sultan of Johor Cup
ஜெர்மனியிடம் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க தயாராகும் இந்தியா
இந்தியா கடைசியாக ஜெர்மனியுடன் ஆகஸ்ட் மாதம் நடந்த 4 நாடுகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியில் எதிர்கொண்டது.
அதில் இரண்டு முறை ஜெர்மனியுடன் மோதிய இந்தியா, 6-1 மற்றும் 3-2 என்ற வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தனர்.
ஜெர்மனியுடனான அரையிறுதி மோதல் குறித்து பேசிய உத்தம், "ஜெர்மனி உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது, நாங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்.
ஆனால் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் அதிகம் இல்லை, மேலும் அந்த நாளில் சிறப்பாக செயல்படும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இது நிச்சயம் சவாலான அரையிறுதிப் போட்டியாக இருக்கும். ஆனால் நாங்கள் நேர்மறை எண்ணத்துடன் விளையாட்டை அணுகுவோம். மேலும் எங்கள் பலத்திற்கு ஏற்ப சரியாக திட்டமிட்டு அவர்களை வீழ்த்துவோம்." என்று கூறினார்.