
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது.
முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 1-1 என சமன் செய்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் சிறப்பாக செயல்பட்டு 116 ரன்களில் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
India vs South Africa ODI head to head stats
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 92 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில், தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் இரு அணிகளும் 38 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 25 போட்டிகளிலும், இந்தியா 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. இரு அணிகளும் தென்னாப்பிரிக்காவில் 6 தொடர்களில் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு முறை மட்டுமே விராட் கோலி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
India vs South Africa Expected Playing XI
இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : கேஎல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடென் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.
India vs South Africa 2nd ODI Pitch and Weather report
இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைந்த அளவில் இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல மழைக்கான வாய்ப்பு குறையும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் போட்டி நடக்கும் நேரத்தில் வெப்பநிலை 19-23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானத்தின் நிலவரத்தைப் பொறுத்தவரை, இந்த ஆடுகளத்தில் விளையாடிய பல போட்டிகள் அதிக ரன்ரேட்டைக் கொண்டிருக்கவில்லை.
இந்த பெரும்பாலான போட்டிகள் 250-260 ரன்கள் மட்டுமே எடுக்கபப்ட்டுள்ளதால், பேட்டர்கள் ரன் குவிக்க போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
India vs South Africa Live Streaming Where to watch
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி விபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கியூபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக அங்கு நடைபெற உள்ளது.
எனினும், இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைகாட்சி சேனல்களிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு களிக்கலாம்.