ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது 100வது சர்வதேச மற்றும் 55வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 10,615 ரன்களை குவித்த ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் ஆனார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10,599 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், ரோஹித் ஷர்மா அந்த சாதனையை தற்போது முறியடித்தார்.
Rohit Sharma becomes 5th player scored most runs for India
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த டாப் 5 வீரர்களின் பட்டியல்
தற்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களின் அடிப்படையில் இந்திய பேட்டர்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக 10,615 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள ரோஹித் ஷர்மா, கடந்த செப்டம்பரில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தார்.
இப்போது அதிக ரன் குவித்தவர்களில் தோனியை விஞ்சியுள்ள நிலையில், இதே வேகத்துடன் தொடர்ந்தால், விரைவில் மற்ற வீரர்களையும் பின்னுக்குத் தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ரோஹித் ஒருநாள் உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக 500க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 49.14 என்ற சராசரியுடன் 31 சதங்களையும் ரோஹித் ஷர்மா அடித்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 316 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
Rahul Dravid 4th Most runs scorer for India in ODI
ராகுல் டிராவிட் (10,768 ரன்கள்)
இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிக ரன் குவித்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக விளையாடி 340 போட்டிகளில் 39.15 சராசரியில் 10,768 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், இந்த வடிவ கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 82 அரைசதங்கள் மற்றும் 12 சதங்கள் அடித்துள்ளார்.
டிராவிட்டின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அதிக ரன் குவித்த முதல் ஐந்துவீரர்களில் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ராகுல் டிராவிட் ஒருநாள் உலகக்கோப்பையில் 860 ரன்கள் குவித்துள்ளார்.
Saurav Ganguly 3rd most run scorer for India in ODI
சவுரவ் கங்குலி (11,221 ரன்கள்)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரராக உள்ளார்.
அவர் 308 ஒருநாள் போட்டிகளில் 40.95 சராசரியுடன் 11,221 ரன்களை எடுத்துள்ளார். இதில் 22 சதங்கள் மற்றும் 77 அரைசதங்களும் அடங்கும்.
மேலும், உலகக்கோப்பையை பொறுத்தவரை, அவர் 21 உலகக் கோப்பை போட்டிகளில் 55.88 என்ற சராசரியை 1,006 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார்.
சவுரவ் கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக 38.67 என்ற சராசரியில் 5,104 ரன்கள் எடுத்தார்.
Virat Kohli second most run scorer for India in ODI
விராட் கோலி (13,677 ரன்கள்)
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள விராட் கோலி, இந்த வடிவத்தில் 13,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் ஆவார்.
அவர் தற்போது 290 போட்டிகளில் 58.44 என்ற சராசரியுடன் 13,677 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வடிவில் அவர் 71 அரைசதங்கள் அடித்துள்ளதோடு, 49 சதங்களையும் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, கேப்டனாக 72.65 என்ற சராசரியுடன் 5,449 ரன்கள் குவித்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை இதுவரை 1,624 ரன்களை குவித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து அதிக ரன் குவித்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sachin Tendulkar highest run scorer for India in ODI
சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்)
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும், சர்வதேச வீரராகவும் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 463 போட்டிகளில் 44.83 என்ற சராசரியுடன் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இந்த வடிவத்தில் 49 சதங்கள் மற்றும் 96 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பையில் 45 போட்டிகளில் 56.95 சராசரியில் 2,278 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை எடுத்தவராக உள்ளார்.
மேலும், ஒருநாள் உலகக்கோப்பையில் 2,000க்கும் அதிகமான ரன்களைக் கடந்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.