இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு
இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார். அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கம்பிர் இதனை பகிர்ந்து கொண்டார். இந்திய மூத்த ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக IndiaToday.in ஏற்கனவே கணித்துள்ளது. தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அப்பதவிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 27 உடன் முடிவடைந்த நிலையில், இப்பதவிக்கு யாரை தேர்வு செய்யவுள்ளது பிசிசிஐ என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.