ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்: GOAT படத்தில் இடம் பெற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், செப்டம்பர் 5 ஆம் தேதி GOAT திரைப்படம் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பலரும் இப்படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர். டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விட்டது. படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருப்பதாக VP பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். படத்தில் 'விசில் போடு' பாடல் IPL போட்டியின் போது இடம்பெறும் என தொடங்கி, படத்தில் MS தோனி-யும் நடித்துள்ளார் என ரசிகர்கள் பல யூகங்களில் இருக்கும் நேரத்தில், தற்போது மற்றுமொரு சர்ப்ரைஸ் விஷயம் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பத்ரிநாத் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை தான் நிறைவேற்றி விடுத்ததாகவும் அவர் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.