Loading...
கிறிஸ்டியானோ ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம்: 10 ஆண்டு காதலுக்கு பின் போர்ச்சுகலில் கோலாகலம்
காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்தார் கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம்: 10 ஆண்டு காதலுக்கு பின் போர்ச்சுகலில் கோலாகலம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
07:51 am

செய்தி முன்னோட்டம்

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை (32) ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை அன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டார். சுமார் 10 ஆண்டுகாலக் காதலுக்குப் பிறகு, போர்ச்சுகலில் உள்ள காஸ்கைஸ் நகரில் நடைபெற்ற எளிய சிவில் பதிவுத் திருமண நிகழ்வில் இருவரும் தங்களது திருமண பந்தத்தை உறுதி செய்தனர். இவர்களது திருமணச் செய்தி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, தங்களது மோதிரங்கள் அணிந்த கைகளின் புகைப்படத்தை ரொனால்டோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு "C❤️G" என்று சுருக்கமாகக் தலைப்பிட்டுத் தனது திருமண மகிழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

காதல்

திருமணத்தில் முடிந்த நீண்ட காலக் காதல்

கடந்த 2017-ஆம் ஆண்டு குஸ்ஸி ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தில் ஜார்ஜினா பணியாற்றிய போது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

தங்களது உறவைப் பற்றிப் பல பேட்டிகளில் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள ரொனால்டோ, ஜார்ஜினா தனது வாழ்க்கையின் மிக முக்கியமான பெண் என்று குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள விளையாட்டுப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT