ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. வரும் வியாழன் (நவம்பர் 23) முதல் இந்தியாவிலேயே தொடங்கி நடைபெறவிருக்கும் இந்தத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. மூத்த வீரர்கள் யாருமே இன்றி இளம் வீரர்களை மட்டும் கொண்ட அணியாக இந்த டி20 அணியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. உலகஉலகக்கோப்பை தொடரிலேயே காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அத்தொடரில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகக்கோப்பையைத் தொடர்ந்து இந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்ற கூறப்பட்டது.
இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்:
ஹர்திக் பாண்டியாவின் காயத்தைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அணிக்கு சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக நியமித்திருக்கிறது பிசிசிஐ. மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோப்பையை வென்ற ருதுராஜ் கெயிக்வாட் துணை-கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி பின்வருமாரு: சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்கடன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் தூபே, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.