சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்; கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதலின் தேதி மாற்றம்
செய்தி முன்னோட்டம்
போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விமானத்தில் பயணம் செய்து ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் வருகை மீண்டும் தாமதமாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவை ஏவுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை, கடைசி நிமிடம் ஏற்பட்ட பழுது காரணமாக ஒத்தி வைத்தது நாசா.
ஃபால்கன் 9 ராக்கெட்டின் தரை ஆதரவு கிளாம்ப் கையில் ஹைட்ராலிக் அமைப்பு பிரச்சினை காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டதாக நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏவுதல் வாய்ப்பு வியாழக்கிழமை இரவு 7:26 EDT (2326 GMT) மணிக்கு முன்னதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் நாசா தெரிவித்துள்ளது.
அரசியல் அழுத்தம்
டிரம்ப், மஸ்க் உள்ளிட்டவர்கள் NASA விற்கு அழுத்தம் தந்ததால் துரிதமாகும் திட்டம்
வியாழக்கிழமை க்ரூ-10 விண்வெளிக்கு சென்று, அங்குள்ள சுனிதா வில்லியம்ஸ் அடங்கிய க்ரூ-9 -ஐ விடுவிக்கும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் 17 திங்கட்கிழமை விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் குழு புறப்படும்.
திட்டமிட்டதை விட முன்னதாகவே வில்மோர் மற்றும் வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, NASA இந்த பணியை துரிதப்படுத்தியுள்ளது.
கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று இரவு 7:48 மணிக்கு (2348 GMT) ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஜப்பான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர் கொண்ட Crew-10 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
பயணம்
சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமிக்கு திரும்பும் பயணம்
புதிய குழுவினர் ISS நிலையத்திற்கு வந்ததும், வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவர், செப்டம்பர் முதல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு காப்ஸ்யூலில் பூமிக்குத் திரும்ப முடியும்.
நாசாவின் கூற்றுப்படி, ISS-ஐ பராமரிப்புக்காக போதுமான அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் வைத்திருக்க, புதிய Crew-10 கிராஃப்ட் வரும் வரை வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் வெளியேற முடியாது.