Loading...
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வெளியூரை

ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2026
02:30 pm

செய்தி முன்னோட்டம்

தற்கால நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் எழுத, ஆவணங்களைச் சுருக்க, பயணத் திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், நாம் இந்த சாட்பாட்டுகளுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அனைத்தும் அவற்றின் எதிர்கால ஏஐ மாடல்களைப் பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது பெரும்பாலான பயனர்கள் அறியாத ஒன்றாகும். பயனர்களின் அடையாளங்கள் நீக்கப்பட்ட பின்னரே இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுவதாக நிறுவனங்கள் கூறினாலும், தங்களது தனிப்பட்ட உரையாடல்கள் ஏஐ பயிற்சிக்கு செல்வதை விரும்பாத பயனர்கள் தங்களது கணக்குகளில் உள்ள சில எளிய செட்டிங்ஸ் மூலம் இந்தத் தரவு சேகரிப்பை எளிதாகத் தடுத்து நிறுத்த முடியும்.

சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி தரவுப் பயன்பாட்டைத் தடுக்கும் முறை

நீங்கள் சாட்ஜிபிடி செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால், சில எளிய படிகளின் மூலம் உங்களது தரவுகள் ஓபன்ஏஐ மாடல்களை மேம்படுத்த பயன்படுவதைத் தடுத்து நிறுத்தலாம்.

முதலில் உங்கள் சாட்ஜிபிடி கணக்கில் லாக்-இன் செய்து, உங்களது புரொஃபைல் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தோன்றும் செட்டிங்ஸ் பக்கத்தைத் திறந்து, அதில் இருக்கும் டேட்டா கன்ட்ரோல்ஸ் என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

அங்கு இருக்கும் Improve the model for everyone என்ற அமைப்பை ஆஃப் செய்துவிட வேண்டும்.

உங்களது பழைய உரையாடல்களை நீக்க விரும்பினால், அதே பகுதியில் உள்ள Delete chat history என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.

ஜெமினி ஏஐ

கூகுள் ஜெமினி கணக்கில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

கூகுள் ஜெமினி ஏஐ தளம் உங்களது தரவுகளை சேகரிப்பதைத் தவிர்க்க இரண்டு முக்கியமான இடங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

முதலாவதாக, மைஆக்டிவிட்டி (myactivity.google.com) பக்கத்திற்கு சென்று, அங்குள்ள 'வெப் & ஆப் ஆக்டிவிட்டி' (Web & App Activity) என்ற அமைப்பை ஆஃப் செய்ய வேண்டும்.

இது புதிய தேடல்கள் மற்றும் ஆப் செயல்பாடுகள் ஏஐ பயிற்சிக்கு சேமிக்கப்படுவதைத் தடுக்கும்.

இரண்டாவதாக, ஜெமினி தளத்தைத் திறந்து, அதன் செட்டிங்ஸ் பக்கத்தில் உள்ள 'ஆக்டிவிட்டி' (Activity) பகுதிக்கு சென்று, அந்த சேமிப்பு அமைப்பையும் ஆஃப் செய்துவிட வேண்டும்.

இதே பகுதியில் இருந்து உங்களது முந்தைய ஜெமினி உரையாடல்களையும் நீங்கள் நிரந்தரமாக நீக்கிக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

கிளாட் ஏஐ

கிளாட் மற்றும் க்ரோக் தளங்களில் ஆஃப் செய்யும் வழிமுறை

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ சாட்பாட்டை பயன்படுத்துபவர்கள், தங்களது புரொஃபைல் ஐகானைக் கிளிக் செய்து செட்டிங்ஸ் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்குள்ள பிரைவசி பிரிவைத் தேர்வு செய்து, Help improve our AI models என்ற அமைப்பை ஆஃப் செய்ய வேண்டும்.

எக்ஸ் தளத்தில் உள்ள க்ரோக் ஏஐயைப் பயன்படுத்துபவர்கள், எக்ஸ் தளத்தின் செட்டிங்ஸ் பக்கத்தில் உள்ள Privacy and safety பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கும் Grok & Third-Party Collaborators என்ற ஆப்ஷனைத் திறந்து, உங்களது பொதுத் தரவுகள் மற்றும் உரையாடல்கள் ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரும் பாக்ஸில் உள்ள டிக் குறியீட்டை நீக்கிவிட வேண்டும்.

ADVERTISEMENT

மெட்டா ஏஐ

மெட்டா ஏஐ கணக்குகளுக்கான தற்போதைய நிலை

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம், தற்போதைய நிலையில் பயனர்களின் தரவுகள் ஏஐ பயிற்சிக்கு செல்வதைத் தடுக்க அப்ளிகேஷன்களுக்குள் நேரடியான எளிய ஆஃப் சுவிட்ச் எதையும் வழங்கவில்லை.

எனினும், பயனர்கள் தங்களது புரொஃபைல் அமைப்புகளைப் பொது வெளியில் தெரியாதவாறு முற்றிலும் பிரைவேட் ஆக மாற்றுவதன் மூலமும், பொதுப் பதிவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் தங்களது உள்ளடக்கங்கள் ஏஐ தரவுத்தொகுப்பில் சேருவதைக் குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும்.

தனியுரிமை

தனியுரிமை அமைப்புகளைப் பரிசோதிப்பதன் முக்கியத்துவம்

நாம் தற்பொழுது செய்யும் இந்தத் தனியுரிமை மாற்றங்கள் அனைத்தும் நமது எதிர்கால உரையாடல்களை மட்டுமே பாதுகாக்கும்.

ஏற்கனவே ஏஐ மாடல்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்ட தரவுகளை இதன் மூலம் மீட்டெடுக்க முடியாது.

எனவே, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு மிக முக்கியம் என்று கருதுபவர்கள், அவ்வப்போது தங்களது ஏஐ கணக்குகளின் செட்டிங்ஸ் மற்றும் சாட் ஹிஸ்டரிகளைப் பரிசீலித்து, தேவையற்ற பழைய உரையாடல்களை நீக்குவதை ஒரு வழக்கமாகக் கொள்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.

ADVERTISEMENT