எலான் மாஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் பறப்பது எப்படி? முழு அறிவியல் பின்னணி
செய்தி முன்னோட்டம்
டெஸ்லா நிறுவனம் தனது அதிநவீன 'டெஸ்லா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் சூப்பர் காரை டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் சோதனை மையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. வெறும் 0.81 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ (60mph) வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்த கார், லாரிகளை தாண்டிப் பறப்பது மற்றும் தலைகீழாக இயங்குவது எனப் பல சாகசங்களை செய்து காட்டி உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கார் எவ்வாறு காற்றில் பறக்க முடியும்? இதன் பின்னணியில் உள்ள 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நுணுக்கங்கள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ:
# 1
கார் காற்றில் பறப்பது எப்படி?
டெஸ்லா ரோட்ஸ்டர் காரில் கோல்டு-கேஸ் த்ரஸ்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் எவ்வித எரிபொருளும் எரிக்கப்படுவதில்லை. மாறாக, காரில் உள்ள பிரத்யேகக் கலனில் மிக அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்டுள்ள காற்று, சிறிய துளைகள் வழியாக அதிவேகமாக வெளியேற்றப்படும் போது கார் காற்றில் மேலே எழும்புகிறது.
நாசா தனது சிறிய செயற்கைக்கோள்களின் திசையை மாற்ற இந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
இக்காரில் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமுக்கப்பட்ட காற்று (250 கிலோ எடைக் காற்று) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
கார் இயங்கும்போது அதிலுள்ள எலெக்ட்ரிக் கம்ப்ரஸர் இக்காற்றை மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொள்ளும்.
# 2
கார் எவ்வளவு நேரம் காற்றில் பறக்க முடியும்?
நாசாவின் கணக்கீட்டின்படி, ஒரு கிலோ அழுத்த காற்று ஒரு கிலோ எடையை ஒரு நிமிடம் வரை தாங்கிப் பிடிக்கும்.
சுமார் 2 டன் எடைகொண்ட இந்த டெஸ்லா கார், தன் கைவசம் உள்ள காற்றைக் கொண்டு சில வினாடிகள் மட்டுமே காற்றில் மிதக்க முடியும்.
காரில் மொத்தம் 10 ஏர் த்ரஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை காற்றில் காரை சுழற்றுவதற்கும், முன்நோக்கி முடுக்குவதற்கும், தரை இறங்கும்போது பிரேக் பிடிப்பதற்கும் பயன்படுகின்றன.
# 3
வெறும் 0.81 வினாடியில் 100 கி.மீ வேகம் சாத்தியமானது எப்படி?
வழக்கமான கார்கள் அதன் டயர்கள் சாலையில் ஏற்படுத்தும் பிடிமானத்தை பொறுத்தே வேகமெடுக்க முடியும்.
ஆனால், ரோட்ஸ்டரின் த்ரஸ்ட் மாடலில் காரின் பின்புறம் அமைக்கப்பட்ட த்ரஸ்டர்கள் காற்றைப் பலமாக பின்னோக்கித் தள்ளுகின்றன.
இது டயர்களின் பிடிமானத்தை விட 4 முதல் 5 மடங்கு கூடுதல் விசையை உருவாக்குகிறது.
டயர்களின் பிடிமானத்தைச் சார்ந்திருக்காத இந்த காற்று விசை காரணமாகவே, கார் புவியீர்ப்பு விசையை விட 3 மடங்கு அதிக வேகத்தில் (0.81 செகண்டில்) 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது.
# 4
தலைகீழாக கார் இயங்குவது எப்படி?
பொதுவாக பந்தய கார்களில் காற்றின் அழுத்தத்தை பயன்படுத்த மேல்பகுதியில் இறக்கைகள் இருக்கும். ஆனால், டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் அடியில் 'மல்டி-மோட் ஃபேன் சக்ஷன் சிஸ்டம்' பொருத்தப்பட்டுள்ளது.
காரின் அடியில் உள்ள காற்றை அதிவேகமாக வெளியேற்றி வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம், காரை தரையோடு பலமாக ஒட்டிக்கொள்ளச் செய்கிறது.
இது புவியீர்ப்பு விசையைப் போல 2G அளவுக்குக் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் தான் இந்த கார் தலைகீழாக உள்ள மேம்பாடுகளிலும் விழாமல் இயங்குகிறது.
# 5
ஸ்பேஸ் எக்ஸ் கூட்டாண்மை மற்றும் மாடல்கள்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் பொறியாளர்களும், டெஸ்லா பொறியாளர்களும் இணைந்தே இந்த த்ரஸ்டர் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஸ்பேஸ்எக்ஸின் 'ஃபால்கன் 9' ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் அதே த்ரஸ்டர் தொழில்நுட்பம் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக்கார் 3 மாடல்களில் 2028-ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.
1. அடிப்படைச் சாலை பயன்பாட்டு மாடல்.
2. வேகத்திற்கான பின்புற பூஸ்டர் மாடல் (முன்பதிவுக் கட்டணம்: $250,000).
3. 10 த்ரஸ்டர்களுடன் காற்றில் பறக்கும் சிங்கிள் சீட்டர் மாடல்
இருப்பினும், இத்தகைய ராக்கெட் த்ரஸ்டர் வசதி கொண்ட கார் சாலைகளில் இயக்க சட்டப்பூர்வ அனுமதி பெறுமா என்பதும், அதன் பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான சத்தம் ஆகியவை பொதுப் போக்குவரத்திற்கு உகந்ததா என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Turns out the future does have flying cars pic.twitter.com/6fexPp6SXI
— Elon Musk (@elonmusk) October 16, 2026