ஓடிடிக்கு வந்த கங்கை அமரன் ஹீரோவாக நடித்து இளையராஜா இசையமைத்த 'லெனின் பாண்டியன்'; எங்கு பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இன்று முதல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படத் தொடங்கியுள்ளது. திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருந்த அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார வெறி கொண்ட வில்லன்களுக்கு எதிராக, எளிய சாமானிய முதியவர் ஒருவர் நடத்தும் சட்டப் போராட்டத்தையும், அதனையொட்டி ஏற்படும் சம்பவங்களையுமே மையமாகக் கொண்டு 'லெனின் பாண்டியன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
படத்தின் நட்சத்திரப் பட்டாளம்
இப்படத்தில் இயக்குநர் கங்கை அமரன், ரோஜா, ஸ்ரீரித்தா ராவ், ஜார்ஜ் மரியான், 'ஆடுகளம்' நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதுமுக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.