Loading...
காற்றில் பறந்து தலைகீழாக சுழலும் கார்! எலான் மஸ்கின் புதிய டெஸ்லா ரோட்ஸ்டர்! 0.81 வினாடியில் 100 கிமீ வேகம்
காற்றில் பறந்து தலைகீழாக சுழலும் எலான் மஸ்கின் புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் அறிமுகம்

காற்றில் பறந்து தலைகீழாக சுழலும் கார்! எலான் மஸ்கின் புதிய டெஸ்லா ரோட்ஸ்டர்! 0.81 வினாடியில் 100 கிமீ வேகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
10:40 am

செய்தி முன்னோட்டம்

பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, வழக்கமான ஸ்போர்ட்ஸ் கார்களின் கற்பனைகளை உடைத்தெறியும் வகையில் தனது புதிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்சாஸில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், இந்த கார் காற்றில் உயரே எழும்பி, தலைகீழாக சுழன்று, பெரிய கன்டெய்னர் லாரியைத் தாண்டி மீண்டும் துல்லியமாக 4 சக்கரங்களிலும் தரையிறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இந்த கார் வெறும் 0.81 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் எனக் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம்

மூன்று மாடல்கள் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தொழில்நுட்பம்

புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் கார் பெர்பார்மன்ஸ், த்ரஸ்ட் மற்றும் ராக்கெட் என மூன்று விதமான வேரியண்டுகளில் வெளிவருகிறது.

இதில் உச்சகட்ட மாடலான ராக்கெட் வேரியண்டில், எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட 10 பிரத்யேக ராக்கெட் த்ரஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அழுத்தப்பட்ட வாயுவைக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, காரை காற்றில் உயர்த்தவும் திசைகளை மாற்றவும் உதவுகிறது.

மேலும், காரை தலைகீழாக ஓட்டினாலும் கீழே விழாமல் தடுக்கும் விசிறி அடிப்படையிலான 2ஜி சக்ஷன் அமைப்பும் இதில் உள்ளது.

ராக்கெட்

சிறப்பு அழைப்பாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ராக்கெட் மாடல்

டெஸ்லாவின் இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய ராக்கெட் வேரியண்ட் அனைவருக்கும் கிடைக்காது.

ஒற்றை இருக்கை கொண்ட இந்த மாடல், டெஸ்லா நிறுவனத்தால் நேரடியாக அழைக்கப்படும் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர மாடல்களான பெர்பார்மன்ஸ் மாடலுக்கு $50,000 முன்பணமும், பின்னால் ராக்கெட் பூஸ்டர் கொண்ட த்ரஸ்ட் மாடலுக்கு $2,50,000 முன்பணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சாலைகளில் இந்த ராக்கெட் த்ரஸ்டர்களைப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அனுமதிகள் குறித்து இன்னும் தெளிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

2028 ஆம் ஆண்டு

2028-இல் சந்தைக்கு வரும் என எதிர்பார்ப்பு

முதல் தலைமுறை ரோட்ஸ்டர் 2008-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் தலைமுறை மாடல் 2017-இல் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

பலமுறை அறிமுகத் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது இந்தப் புதிய ரோட்ஸ்டர் கார் 2028-ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 1,000 கிமீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படும் இந்த கார், சந்தைக்கு வரும் பட்சத்தில் உலகின் அதிவேக மற்றும் மிகவும் வித்தியாசமான மின்சார ஸ்போர்ட்ஸ் காராக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT