LOADING...
விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?
விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள் அமைக்க எலான் மஸ்க் திட்டம்

விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
12:26 pm

செய்தி முன்னோட்டம்

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இப்போது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பூமியில் உள்ள மின்சாரக் கட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்காமல், சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அவர் இலக்கு வைத்துள்ளார். இதற்காகத் தனது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஏஐ நிறுவனங்களை இணைத்து மிகப்பெரிய ஐபிஓ வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

சவால்கள்

விண்வெளியில் நிலவும் தொழில்நுட்ப சவால்கள்

விண்வெளியில் எந்நேரமும் சூரிய ஒளி கிடைக்கும் என்றாலும், அங்கு டேட்டா சென்டர்களை அமைப்பதில் விஞ்ஞானிகள் மூன்று முக்கியமான தடைகளைக் குறிப்பிடுகின்றனர்: டேட்டா சென்டர்களில் உள்ள சிப்கள் இயங்கும்போது அதிக வெப்பத்தை உருவாக்கும். பூமியில் காற்று அல்லது தண்ணீர் மூலம் இதைக் குளிர்விக்கலாம். ஆனால் விண்வெளி ஒரு வெற்றிடம் என்பதால், அங்கு வெப்பம் வெளியேற வழியில்லை. இது ஒரு பிளாஸ்க் போல வெப்பத்தை உள்ளேயே தேக்கி வைக்கும். இதனால் சிப்கள் மிக வேகமாக உருகிவிடும் அபாயம் உள்ளது. இதற்காகப் பிரம்மாண்டமான ரேடியேட்டர் பேனல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குப்பைகள்

விண்வெளிக் குப்பைகள் மற்றும் மோதல்

ஏற்கனவே 10,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. எலான் மஸ்க் திட்டமிடுவது போல ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களை அனுப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று மோதும் அபாயம் அதிகம். மணிக்கு 17,500 மைல் வேகத்தில் செல்லும் இந்தச் செயற்கைக்கோள்கள் மோதினால், அது சங்கிலித் தொடர் விபத்துக்களை உருவாக்கி மற்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் அழித்துவிடும். பூமியில் உள்ள டேட்டா சென்டர்களில் ஒரு சிப் பழுதானால் தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக மாற்ற முடியும். ஆனால் விண்வெளியில் அத்தகைய ரிப்பேர் டீம் எதுவும் கிடையாது. மேலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் விலையுயர்ந்த ஜிபியு சிப்களை எளிதில் சேதப்படுத்தும்.

Advertisement

எலான் மஸ்க்

எலான் மஸ்கின் பலமும் போட்டியும்

கூகுள் மற்றும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்களும் விண்வெளி டேட்டா சென்டர்களை அமைக்கப் போட்டியிடுகின்றன. இருப்பினும், எலான் மஸ்கிடம் இருக்கும் மிகப்பெரிய பலம் ராக்கெட்டுகள். தனது சொந்த ராக்கெட் என்பதால் இதற்கு ஒரு கிலோவுக்கு $2,000 மட்டுமே செலவாகும். மற்ற நிறுவனங்களுக்கு இதே சேவைக்கு மஸ்க் $20,000 வரை கட்டணம் வசூலிக்கக்கூடும். விண்வெளிக்குச் செல்லும் கேட்வே மஸ்கின் கையில் இருப்பதால், இது ஒரு மிகப்பெரிய அதிகாரப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், பூமியில் உள்ள காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் டேட்டா சென்டர்களுக்காக அழிக்கப்படுவது குறையும். ஆனால், விண்வெளியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இயந்திரங்களைச் சரியாக நிர்வகிப்பது என்பது மனிதகுலம் இதுவரை கண்டிராத ஒரு சவாலாகும்.

Advertisement