LOADING...
கல்யாண பந்தியில் எதைச் சாப்பிடலாம்? குழப்பத்தை தீர்க்க பெங்களூரு டெக்கி உருவாக்கிய 'BuffetGPT'
'BuffetGPT' துல்லியமான 'Game Plan' ஒன்றை தயார் செய்து தருகிறது

கல்யாண பந்தியில் எதைச் சாப்பிடலாம்? குழப்பத்தை தீர்க்க பெங்களூரு டெக்கி உருவாக்கிய 'BuffetGPT'

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
07:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய திருமணங்களில் உணவு பந்தி என்பது மிகப்பெரிய திருவிழா போன்றது. ஆனால், நூற்றுக்கணக்கான உணவுகளில் எதை தேர்வு செய்வது, எதை சாப்பிட்டால் வயிறு சீக்கிரம் நிறையாது போன்ற குழப்பங்கள் பலருக்கும் உண்டு. இந்த கவலையை தீர்க்க பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பங்கஜ், 'BuffetGPT' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கியுள்ளார். இது ஒரு திருமண விருந்தில் எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கான துல்லியமான 'கேம் பிளான்' (Game Plan) ஒன்றை தயார் செய்து தருகிறது. பங்கஜ், எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செயல்பாடு

இது எப்படி செயல்படுகிறது?

இந்த ஏஐ கருவி 'கணினி பார்வை' (Computer Vision) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் விருந்தில் உள்ள அனைத்து உணவு வகைகளையும் ஸ்கேன் செய்து, அந்த உணவுகளின் கலோரி மற்றும் தன்மைக்கு ஏற்ப எதை முதலில் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. குறிப்பாக, மனிதனின் வயிற்று பகுதியின் கொள்ளளவை (Stomach volume physics) அடிப்படையாக கொண்டு இது ஆலோசனைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தனது நண்பரின் திருமணத்தில் இதன் முதல் பதிப்பை (Alpha Version) பங்கஜ் பரிசோதித்துப் பார்த்துள்ளார். அதற்கு நல்ல பலன் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement