லேடீஸ், சோலோ ட்ரிப் செல்ல சில பிரபலமான சுற்றுலா தலங்கள் இதோ
சோலோ ட்ரிப் என்பது ஒரு திரில்லிங்கான மகிழ்ச்சியான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே வேளையில், அது சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பெண்களுக்கு! வழக்கமான முன்னெச்சரிக்கைகளை தாண்டி, ஒரு சில சூழ்நிலைகளில் சிலருக்கு அச்சுறுத்தல் நேரக்கூடும். அதனால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமோ என தோன்றலாம். அது போன்ற சூழலில், வெளிநாடுகளுக்கு சோலோ ட்ரிப் செய்ய வேண்டும் என்றால், கூடுதல் கவனம் தேவைப்படுமே என்று நீங்கள் வருந்த வேண்டாம். உங்களுக்காகவே சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை உங்களுக்கு தந்துள்ளோம். இந்த விடுமுறைக்கு அங்கே சென்று பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!
சுவிட்சர்லாந்து
இந்த நகரத்தில் அர்த்த ராத்திரி 1:00 மணிக்கு கூட நீங்கள் தெருக்களில் சுதந்திரமாக செல்லலாம். பலராலும் விரும்பப்படும் இந்த சுற்றலா நகரம், பெண்கள் தனியாக பயணிக்க உலகின் பாதுகாப்பான நாடுகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. சுவிட்சர்லாந்து நகரத்தின் பாதுகாப்பான பொது போக்குவரத்து அமைப்பு, நல்ல வெளிச்சம் கொண்ட தெருக்கள் போன்றவை பிக்பாக்கெட் போன்ற பாலியல் குற்றங்கள் பற்றிய கவலைகளை குறைக்கிறது. இது மற்ற சுற்றுலாத்தலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் அரிதான விஷயமாகும்.
சிங்கப்பூர்
இது போன்றதொரு ஒவ்வொரு பாதுகாப்பான இடம் ஐரோப்பாவில் எங்கும் இல்லை. இந்த தென்கிழக்கு ஆசிய தீவு நாடு, பெண்களின் பாதுகாப்பு பற்றிய பல்வேறு ஆய்வுகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புகழ் பெற்ற இந்த தீவு நகரம், தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக விளங்குகிறது. சிங்கப்பூர் மிகக் குறைந்த குற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட உரிமைகளை மதிக்கும், பொது ஒழுங்கைப் பராமரிக்கும் தரத்தை நிலைநிறுத்துகிறது.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து, மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகள், விருந்தினர்களை கனிவோடு உபசரிக்கும் உள்ளூர்வாசிகள் மற்றும் எல்லையில்லா ஆய்வுகள் ஆகியவை ஒரு மறக்க முடியாத சாகச உணர்வை வழங்குகிறது. இந்த நகரிலும் குற்றச்செயல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக்கில் உள்ள போலீசார் கூட துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதில்லை. இந்த அழகிய நாடு சிறந்த பொது சுகாதாரம் மற்றும் வலுவான சமூக சேவைகளை கொண்டுள்ளது. அதனால் சோலோ ட்ரிப் செல்லும் போது உச்சபட்ச பாதுகாப்பை வழங்குகிறது. குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பாலின சமத்துவத்துடன், ஐஸ்லாந்து தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு சிறந்த இடமாக உள்ளது.
நியூசிலாந்து
நியூசிலாந்து, தற்போது உலகளாவிய அமைதிக் குறியீட்டின்படி நான்காவது மிகவும் அமைதியான நாடு, குறைந்த குற்ற விகிதத்தை கொண்ட நாடு இது. இந்த நகரின் வீதியில் பெரும்பான்மையான நேரத்தில் மக்கள் கூட்டமாக உலவுவது வழக்கம். அதனால், தெருக்களில் பயமின்றி நடக்கலாம். இருப்பினும், நியூசிலாந்து சாலைகளில் நீங்கள் தனியாக கார் பயணம் செய்வதென்றால், போதுமான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கான பாதைகளைத் திட்டமிடுங்கள்.
ஜப்பான்
ஜப்பான், 2022 உலகளாவிய அமைதிக் குறியீட்டில், உலகின் முதல் பத்து பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்டது. இந்நாட்டிலும் பாதுகாப்பு தரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. உள்ளூர் மக்களிடமிருந்து சுற்றுலாவாசிகள் மீது துன்புறுத்தல் நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. வன்முறை குற்றங்கள் மிகவும் அரிதானவை, அதே சமயம் பிக்பாக்கெட் போன்ற சிறிய குற்றங்கள் அந்த ஊரில் யாரும் கேள்விப்படாதவை என்றே கூறலாம். ஆங்கிலம் அதிகம் பேசப்படாவிட்டாலும், உள்ளூர்வாசிகள் பணிவும், விருந்துபசாரத்திலும் சிறந்தவர்கள். அவர்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பது போல சுற்றுலாவாசிகளை கவனிக்க தவறமாட்டார்கள். எனினும், அவர்களுடன் சம்பாஷணை செய்ய, சில பொதுவான சொற்றொடர்களைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு உதவக்கூடும்.