LOADING...
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் படுத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வரலாம்; ஆய்வில் பகீர் தகவல்
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் படுத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வரலாம்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் படுத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வரலாம்; ஆய்வில் பகீர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
06:31 pm

செய்தி முன்னோட்டம்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் அல்லது அசெட்டமினோஃபென் எனப்படும் வலி நிவாரணியை பயன்படுத்துவது, பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், கவனம் சிதறும் குறைபாடு (ADHD) மற்றும் பிற நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் (NDDs) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பிஎம்சி சுற்றுச்சூழல் ஆரோக்கியம் (BMC Environmental Health) என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஹார்வர்ட் டி.எச்.சான் பள்ளி மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்தப் பணியில் ஈடுபட்டது. உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகளில் பாராசிட்டமாலும் ஒன்று. இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 46 முந்தைய ஆய்வுகளில் இருந்து 1,00,000-க்கும் மேற்பட்ட நபர்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.

முடிவு

ஆராய்ச்சி முடிவுகள்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்பாட்டிற்கும், ஆட்டிசம் மற்றும் ADHD போன்ற குறைபாடுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை இந்த ஆராய்ச்சி வலுவாக ஆதரிக்கிறது. ஆய்வின்படி, பாராசிட்டமால் பயன்பாட்டின் நேரமும், அபாயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. குறிப்பாக, கர்ப்பத்தின் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் மாதங்களில் இது பயன்படுத்தப்பட்டதா என்பது ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும், காய்ச்சல் மற்றும் வலியை குணப்படுத்த பாராசிட்டமால் தேவைப்படலாம் என்றும், அவை குழந்தைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, மருத்துவ வழிகாட்டுதலின் கீழ், மிகக் குறைந்த அளவில், குறுகிய காலத்திற்கு மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இது பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அபாயங்களை தனிப்பட்ட முறையில் மதிப்பிட உதவும்.