கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
செய்தி முன்னோட்டம்
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம். இந்த காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மட்டுமன்றி, ஓய்வெடுக்கவும், ஊர் சுற்றவும் இது அருமையான நேரம். இந்த வருடம் கோடை விடுமுறையில் நீங்கள் இதுவரை பார்க்காத வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், இந்தியாவில் உள்ள இந்த 5 சுற்றுலா இடங்கள் உங்களுக்கு மிகவும் பெஸ்ட் சாய்ஸா இருக்கும். இங்குள்ள குளிர்ச்சியான, அழகான இடங்கள் உங்களுக்கு ஒரு புது உலகத்தையே காட்டும். இந்த கட்டுரையில், இந்தியாவில் உள்ள குளிர்ச்சியான 5 சுற்றுலா இடங்களை பற்றிப் பார்ப்போம்.
#1
கின்னார் (இமாச்சல பிரதேசம்)
இமாச்சல பிரதேசத்தில் உள்ள கின்னார், ஒரு அழகான இடம். இயற்கை அழகுக்கு மிகவும் பெயர் பெற்றது. பனி மூடிய மலைகள், பசுமையான காடுகள், அமைதியான ஆறுகள் என இங்குள்ள காட்சிகள் டூரிஸ்ட்களை கவர்ந்திழுக்கும். கின்னாரில் நீங்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, சங்லா பள்ளத்தாக்கு, கல்பா மாதிரி இடங்களை பார்க்கலாம். கோடைகாலத்தில்கூட இங்கு வானிலை குளுகுளு என இருக்கும். அதனால், கோடை கால விடுமுறையை கழிக்க ஏற்ற இடமாக இருக்கும். இங்குள்ள உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியமும் உங்களை கவரும்.
#2
மூணாறு (கேரளா)
கேரளாவின் பிரபலமான சுற்றுலா இடம் மூணாறு. அழகான மழை சரிவில் டீ எஸ்டேட்டுகளுக்கு நடுவில் ஆகாயங்கள் கீழ் இறங்க ரம்யமான சூழலை ரசிக்க பலரும் இங்கே அடிக்கடி விசிட் அடிப்பார்கள். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,600 மீட்டர் உயரத்துல் உள்ளதால், அதன் வானிலை இதமான குளிரை தரும். மூணாறில் டீ எஸ்டேட்டுகள் மட்டுமின்றி, ஆனைமுடி சிகரம், இரவிகுளம் தேசிய பூங்கா, சிங்க பாறை மாதிரி இடங்களையும் பார்த்து என்ஜாய் செய்யலாம். இங்குள்ள குளிர்ந்த காற்றும், அமைதியான சூழலும் உங்களுக்கு ஒரு அருமையான ரிலாக்ஸை தரம் என்பதில் ஐயமில்லை.
#3
காங்ரா பள்ளத்தாக்கு (இமாச்சல பிரதேசம்)
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மற்றொரு அழகான சுற்றுலா இடம் காங்ரா பள்ளத்தாக்கு. இங்குள்ள புராதன கலாச்சார சின்னங்களும், இயற்கை அழகும் ரொம்பவே பிரபலம். இந்த பள்ளத்தாக்கு தர்மசாலா, மெக்லியோட்கஞ்ச் மாதிரி இடங்களுக்கு பிரபலம். இங்கு நீங்கள் காங்ரா கோட்டை, பைஜ்நாத் கோயில், கர்வா கோயில் உள்ளிட்ட பழமையான இடங்களை பார்க்கலாம். காங்ரா பள்ளத்தாக்கில் கோடைகாலத்தில் கூட வானிலை ஜில்லென இருக்கும். அதனால், உங்கள் லிஸ்டில் இந்த ஊரை தேர்வு செய்யலாம்.
#4
டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்)
மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், ஒரு முக்கியமான ஹில் ஸ்டேஷன். டீ எஸ்டேட்டுகளுக்கும், மலை ரயில்வேக்கும் மிகவும் பிரபலம். பல படங்களில் இடம்பெற்றுள்ள இந்த இடத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,042 மீட்டர் உயரத்தில் உள்ளது. டார்ஜிலிங்க்கில் நீங்கள் டைகர் ஹில், படாசியா லூப் கார்டன், டார்ஜிலிங் மவுண்டன் ரயில்வே மியூசியம் மாதிரி இடங்களை கண்டு களிக்கலாம். இங்குள்ள சுத்தமான காற்றும், அமைதியான சூழலும் உங்களுக்கு ஒரு அருமையான மன அமைதியை தரும்.
#5
குல்மார்க் (ஜம்மு-காஷ்மீர்)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்மார்க், ஒரு முக்கியமான சுற்றுலா இடம். இயற்கை அழகுக்கும், சாகசமான செயல்பாடுகளுக்கும் இந்த இடம் மிகவும் பிரபலம். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்துது சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோடைகாலத்தில் கூட இங்கு வானிலை குளுகுளுவென இருக்கும். குல்மார்க்கில் நீங்கள் குல்மார்க் கோல்ஃப் கோர்ஸ், கில்லன்மார்க் ட்ரெக்கிங் ரூட், குல்மார்க் ஸ்கி ரிசார்ட் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.