மழைக்காலத்தை இதமாக்கும் 4 பானங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மெல்ல தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிரான சீதோசன நிலை நிலவுகிறது.
இந்த மழைக்காலத்தில், நம் அனைவருக்கும் கையில் ஒரு சூடான பானத்துடன், புத்தகம் படிக்கவோ, பிடித்தமான வெப்சீரிசை பார்க்கவோ அல்லது பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடவோ விரும்புவோம்.
மழைக்காலத்தில் உங்களுக்கு இதமளிக்க, நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டிய நான்கு பானங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
கிளாசிக் ஹாட் சாக்லேட்
ஹாட் சாக்லேட் காலம் கடந்து அனைத்து வயதினராலும், அதன் மென்மையான திடம் மற்றும் சுவைக்காக விரும்பப்படுகிறது.
ஒரு கப் ஹாட் சாக்லேட் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை சூடாக்கி, அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோகோ பொடி மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
அது மென்மையாகும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் உங்களுக்கு பிடித்த குவளையில் ஊற்றி, மேலே மார்ஷ்மெல்லோஸ் அல்லது கிரீம் சேர்த்து, ஹாட் சாக்லேட்டின் சுவையை அனுபவியுங்கள்.
3rd card
மசாலா தேநீர்
மழைக்காலத்திற்கும் மசாலா தேநீர்ருக்கும் அலாதி பொருத்தம் உள்ளது. ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஒரு தேநீர் பையைச் சேர்த்து, 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு தனி பாத்திரத்தில், ஒரு கப் பால், ஒரு இலவங்கப்பட்டை, மூன்று கிராம்பு, மூன்று ஏலக்காய்கள் மற்றும் ஒரு துண்டு புதிய இஞ்சியை சேர்த்து சூடாக்கவும்.
தேநீரையும், பாலையும் கலந்து, தேனுடன் சேர்த்து, காரமான, நறுமணமிக்க மசாலா தேநீரை சுவைக்கலாம்.
4th card
கிரீமி புதினா மொச்சா(Creamy peppermint mocha)
குளிர்கால பானங்களில் கிரீமி புதினா மொச்சா தனிச்சிறப்புகளை பெற்றுள்ளது. மழைக்காலத்திற்கு இதம் அளிப்பதும் அல்லாமல் உடலுக்கு நன்மையும் அளிக்கிறது.
ஸ்ட்ராங்கான காபி அல்லது எஸ்பிரெசோ உடன், இரண்டு ஸ்பூன் புதினா சிரப் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் கோக்கோ பொடியை சேர்க்கவும்.
ஒரு கப் பாலை கொதி நிலைக்கு குறைவாக சூடாக்கி, அதை காபி கலவையில் சேர்க்கவும்.
அந்தக் கலவையின் மேலே கிரீம், சாக்லேட் அல்லது நொறுக்கப்பட்ட சாக்லேட் மிட்டாய்களை தூவி பருகலாம்.
5th card
காரமான ஆப்பிள் சைடர்(apple cider)
இலவங்கப்பட்டை குச்சிகள், கிராம்பு மற்றும் ஜாதிக்காயுடன் ஆப்பிள் சாற்றை வேகவைக்கவும்.
சுவைகளை 15-20 நிமிடங்கள் கரைக்க அனுமதித்த பின்னர், உங்கள் குவளையில் சூடான, மணம் கொண்ட சைடரை வடிகட்டி பரிமாறலாம்.
நீங்கள் ஒரு இலவங்கப்பட்டை குச்சி அல்லது ஆப்பிள் துண்டு கொண்டு சைடரை அலங்கரிக்கலாம்.
மசாலாப் பொருட்களின் கலவையுடன், இனிப்பான ஆப்பிள் சாற்றை பருகி மழைக்கால மாலைப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.