Loading...
மழைக்கால ஆரோக்கியம்: சளி, காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி?
மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புள்ளது

மழைக்கால ஆரோக்கியம்: சளி, காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
03:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பருவமழைக்காலம் தொடங்கி விட்டது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக அநேக இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது புயலாக மாறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழை, புயல் மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் நம் உடலையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சில எளிய மற்றும் அவசியமான வழிமுறைகள் இதோ:

# 1

பாதுகாப்பான உணவு முறை மற்றும் தூய்மை

காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை சமைப்பதற்கு முன் நன்றாகக் கழுவ வேண்டும். முடிந்தவரை உப்பு நீரில் கழுவி சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துவது நல்லது.

சாலட், பச்சைக் காய்கறிகள் அல்லது அரைவேக்காடு உணவுகளைத் தவிர்த்து, நன்றாக முழுமையாக சமைத்த சூடான உணவுகளை சாப்பிடுங்கள். இது நுண்கிருமிகளால் பரவும் தொற்றுகளைத் தவிர்க்க உதவும்.

மழை நாட்களில் வெளியே சாப்பிடுவதையோ, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதையோ முற்றிலுமாகத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

# 2

குடிநீர் மற்றும் உடல் பாதுகாப்பு

எப்போதுமே காய்ச்சி வடிகட்டிய வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.

இது உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வதுடன், நீரால் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளையும் தடுத்து நிறுத்தும்.

கனமழை பெய்யும் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

ADVERTISEMENT

# 3

வீட்டைச் சுற்றியுள்ள தூய்மை மற்றும் கொசு ஒழிப்பு

மழைக்காலத்தில் தேங்கும் நீரால் கொசுக்களின் தொல்லை அதிகரிக்கும்.

எனவே, வீட்டின் உள்ளேயும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாத்திரங்கள், தேவையற்ற துணிகள் மற்றும் குப்பைகளைத் தேங்க விடாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

வீடு மற்றும் அதன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது டெங்கு போன்ற ஆபத்தான காய்ச்சல்களில் இருந்து குடும்பத்தைப் பாதுகாக்க உதவும்.

ADVERTISEMENT