இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா?
மருத்துவ ஆய்வின் படி, பெரும்பாலான இந்தியர்கள் இரும்பு சத்து குறைபாடால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக தாய்மார்களும் வளரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளும் இரும்பு சத்து குறைபாடால் பலவித நோய்த்தொற்றிற்கு ஆளாகிறார்கள். இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும். இதனால் ரத்த சோகை ஏற்படுவது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவும் குறைகிறது. இந்த குறைபாட்டை போக்குவதற்கு அரசு சார்பாக மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனினும், இயற்கை முறையில் மருந்துகள் இல்லாமலேயே, இந்த குறைபாட்டை நீக்குவதற்கு பல உணவுகள் உள்ளது. அவற்றில் முக்கியமான சில உணவுகளை இங்கே பட்டியலிட்டுளோம்.
இரும்பு சத்து நிறைந்த உணவுகள்
கேரட்: கேர்ட்டில் வைட்டமின் ஏ மட்டுமின்றி, பீட்டா கரோட்டின் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது. பீட்ரூட்: இதனை வழக்காடு மொழியில், 'ரத்த பீட்ரூட்' என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அதோடு உடலுக்குத் தேவையாக அடிப்படையான வைட்டமின்களும் மினரல்களும் இதில் இருக்கின்றன. நெல்லிக்காய்: நெல்லிக்காயில் இரும்புச்சத்துடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதிக அளவில் இருப்பதால், இரும்புச்சத்தை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. எள்ளு: எள்ளில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, ஜிங்க், செலீனியம், வைட்டமின் பி6, ஃபோலேட், வைட்டமின் ஈ உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. பேரிச்சை: பேரிச்சைபழத்தில் இரும்புச் சத்து மட்டுமின்றி, காப்பர், மக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன.